போதைப் பொருளில் வந்த பணத்தை வைத்து நாடாளுமன்ற தேர்தலை திமுக சந்திக்க உள்ளது - ஆர்.பி.உதயகுமார்
தமிழகத்தை போதைப்பொருள் களமாக மாறியதற்கு ஸ்டாலினும், உதயநிதியும் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய ராஜ்பவன் எப்போது செல்வார்கள் என மக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
போராட்டத்தில் ஆர்.பி.உதயகுமார்
மதுரையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி தி.மு.க., அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார். அப்போது ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் கடத்தல் சர்வதேச கும்பல் தலைவன் ஜாபர் சாதிக்கோடு உள்ள தொடர்பு இன்றைக்கு அம்பலப்படுத்தப்பட்டு இருக்கிற காரணத்தினாலே எப்போது இதற்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலகுவார்கள் என்பதை தமிழ்நாடு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஜாபர் சாதிக் டெல்லியில் கைது செய்யப்பட்ட மூன்று பேர்களும் கொடுத்த அந்த வாக்குமூலம் இன்றைக்கு ஊடக செய்தியாக வெளிவந்திருக்கிறது. இதனால் நிலைகுலைந்து போயிருக்கிறது திமுக கூடாரம். போதை பொருள் நடமாட்டத்தால் மோசமான நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டதற்கு திமுக தான்முதல் காரணம் அதற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலினும், அவரது வாரிசு அரசியல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
நிலைகுலையச் செய்துள்ளது
இன்றைக்கு தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறி இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் தமிழக இளைஞர்கள், பொது மக்கள் போதைக்கு அடிமையாகி தமிழகம் சீரழிவுகளை ஏற்படும் என்பதை அனைத்திந்திய அண்ணா திராவிட பொதுச் செயலாளர் எடப்பாடியார் சட்டசபையில் எச்சரிக்கை மணி அடிக்கின்ற போதும், மக்கள் மன்றத்திலே எச்சரிக்கை மணி அடிக்கின்ற போது அதை அலட்சிய போக்கோடு கடந்து சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின் அதனுடைய விளைவு என்ன? இன்றைக்கு திமுக தான் அதன் முழுசூத்திதாரியாக இருந்திருக்கிறது என்பதை இன்றைக்கு சர்வதேச போதை கும்பல் கடத்தல் தலைவன் ஜாபர் சாதிக் கொடுத்த வாக்குமூலம் இன்றைக்கு நம்மையெல்லாம் நிலைகுலையச் செய்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்
மோசமான நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டதற்கு திமுகவே காரணம். எனவே இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், அவர் மகன் வாரிசு அரசியல் அமைச்சர் உதயநிதி தங்கள் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களுடைய கோரிக்கையாக இருக்கிறது. நாளையே சட்டமன்றத்திற்கு தேர்தல் வந்தாலும், தமிழ்நாட்டு மக்களுடைய ஒரே நம்பிக்கையாக எடப்பாடியார் அவருடைய தலைமையில் களம் காண்போம். இந்த போதைப்பொருள் சாம்ராஜ்யத்திற்கு துணை போன திமுகவை இந்த ஆட்சி கட்டில் இருந்து அப்புறப்படுத்துகிற வரை, போதைப்பொருள் கடைசி துளி இருக்கிற வரை போராடுவோம் போராடுவோம் அதிலே வெற்றி காண்போம். இவ்வாறு பேசினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ADMK Protest: தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம் அறிவிப்பு - போதைப்பொருளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் கண்டனம்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளைக்கு "கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்தில் வீடு கட்டும் பணி தொடக்கம்!