Watch video | நியூசிலாந்தில் இறந்தவருக்கு மதுரையில் காணொளி மூலம் அஞ்சலி.. சோகத்தில் ஆழ்ந்த உறவினர்..
கொரோனோ பரவல் எதிரொலி-நியூசிலாந்தில் இறந்தவருக்கு மதுரையில் காணொளி மூலம் அஞ்சலி செலுத்திய உறவினர்கள்.
மதுரை மாநகராட்சியின் முதல் மேயரான முத்துவின் மனைவி ரஞ்சிதம் முத்து. இவர் நியூசிலாந்தில் வசிக்கும் அவரது மூத்த மகனுடன் வசித்து வருகிறார். 88 - வயதான இவர் கடந்த 2-ம் தேதி வயது முதிர்வு காரணமாக காலமானார். இந்நிலையில் அவரது உடல் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு வர முடியாத சூழல் ஏற்பட்டதால் நியூசிலாந்தில் வைத்து அவரது உடலுக்கு இறுதி சடங்கு மற்றும் நல்லடக்கம் நடைபெற்றது. உறவினர்களும் நியூசிலாந்திற்கு செல்ல முடியாத நிலையில் காணொளியில் இறுதி சடங்கு மற்றும் நல்லடக்கத்தை நேரலை காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.
#Abpnadu மதுரையின் முதல் மேயர் முத்துவின் மனைவி நியூசிலாந்தில் மரணம்... உடல் சொந்த ஊருக்கு எடுத்து வரமுடியாத சோகம்.. ஆன்லைனில் அஞ்சலி செலுத்திய உறவினர்கள்..#Abpnadu | #online | #death | #madurai | #memories | #praying | @sdineshhero | @thinak_ | @Manikandansmk23 | . . . . . pic.twitter.com/mWPNHbAs5H
— Arunchinna (@iamarunchinna) February 5, 2022