மேலும் அறிய

அதிமுகவின் மீது தொடர்ந்து அவதூறுகளை அள்ளி தெளித்து வரும் அரைவேக்காடு அமைச்சர்கள் - ஆர்.பி சீற்றம் !

“மூன்றாண்டுகளிலும் மூன்று கட்சிக்கு தாவிய ஆதவ் அர்ஜுனாவின் ஊதுகிற சங்கும். இது யுனிவர்சல் லாங்வேஜ் தான்” - கடுமையாக சாடும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

தனது வீடியோ பதிவு மூலம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 
ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள பதிவு
 
 "வெறும் வசீகரத்தை மட்டும் மூலதனமாக்கி முதல்வராக அமர்ந்திருக்கின்ற விஜய் அவர்களோடு, அடுத்தடுத்து கட்சிகள் கூட்டணி சேர்வதற்கும், அடுத்த கட்சிக்காரர்கள் பதவிக்காக அதிகாரத்திற்காக விஐயோடு சேருவதை நியாயப்படுத்தி தவேக அமைச்சர்கள் பேசுவதற்கும் கிடைத்திருக்கும் ஒரே யுனிவர்சல் லாங்குவேஜ். எடப்பாடியாரை திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக முயற்சி செய்தார்' - என்று கூறுகிறார்கள். அதனால் தான் நாங்கள் அதிமுகவை விட்டு வெளியேறுகிறோம் என்று அதிமுகவிலேயே ஆண்டு அனுபவித்து இப்போது அமைச்சர் பதவி தேடி செல்கிறவர்கள் கற்பனையாக கட்டவிழ்த்து விடுகிற இந்த கதை திட்டமிட்டு பரப்பப்படுகிறதோ என்று தான் நமக்கு புரிய வருகிறது. 
 
திட்டமிட்டு பரப்பப்படுவதாக நமக்கு தெரிகிறது.
 
அதோடு திமுகவிலிருந்து வெளியேறி இருக்கிற கூட்டணி கட்சிகள் கூறுகிற காரணமும் முழுக்க முழுக்க கற்பனைக் கலந்த கட்டுக்கதையாக இதே யுனிவர்சல் லாங்குவேஜை  தான் திரும்பத் திரும்ப அவர்கள் சொல்லி அதிகாரத்திற்காக, அமைச்சர் பதவிக்காக நாங்கள் தவெகவுடன் போகவில்லை என்று த.வெ.காவின் புதிய உறவுக்கு நியாயம் கற்பித்து  கூறி வருவது  திட்டமிட்டு பரப்பப்படுவதாக நமக்கு தெரிகிறது. முதல்வர விஜய்  தலைமையிலே அமைச்சராக  உள்ள ஐந்தாண்டுகளில் ஐந்து கட்சிக்கு மாறிய அமைச்சர் நிர்மல் குமார் அதிமுகவினுடைய ஆயுளைப் பற்றி பேசுவதற்கு என்ன யோகியதை,தகுதி இருக்கிறது. அப்படி ஏதாவது அவருக்கு தகுதியோ, மக்கள் பணியில் ஆற்றிய சேவையோ இந்த நாட்டு மக்களுக்காக எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும். அதோடு மூன்றாண்டுகளிலும் மூன்று கட்சிக்கு தாவிய ஆதவ் அர்ஜுனாவின் ஊதுகிற சங்கும். இது யுனிவர்சல் லாங்வேஜ் தான்.
 
கட்டுக் கதை
 
எடப்பாடியாரை முதலமைச்சராக ‌ஆக்குவதற்கு ஸ்டாலின் முயற்சி செய்தார் என்கிற ஒரு கட்டுக் கதையை அவர்கள் தொடர்ந்து அவிழ்த்து விடுகிறார்கள். ஆகவே இதோடு அமைச்சர்கள் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்று  சொன்னால் கோடிக்கணக்கான தொண்டர்களுடைய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நம்பகதன்மை, செல்வாக்கை, மக்கள் நன்மதிப்பை, 54 காலம் செய்த சேவையை பின்னடைவு ஏற்படுத்தி இருந்த வகையிலே அண்ணா திமுகவின் ஆய்வை நிர்ணயிக்க த.வெ.க  அடிபொடிகளுக்கு அரைவேக்காடு அமைச்சர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதை மட்டும் இந்த நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்கிறேன்.
 
வரலாறு தெரியாது
 
ஏன் என்று சொன்னால் அவர்களுக்கு வரலாறு தெரியாது. எடப்பாடியார் நான்கரை ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்த போதும் சரி, ஐந்தாண்டு காலம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் சரி  எடப்பாடியார் திமுக தலைவர் ஸ்டாலினை பார்த்து பல்லு இளிக்கிற வேலையும், பல்லை காட்டுகிற வேலையும், பல்லாக்கு தூக்குகிற வேலையும் எந்த நேரத்திலும், எந்த வடிவத்திலும் எந்த உருவத்தில் இருக்கக் கூடாது என்பதிலே அம்மாவை போல உறுதியாக இருந்தவர் என்பதற்கு பல சான்றிதழ் இருந்தாலும் ஒரே ஒரு சான்று மட்டும் நான் இந்த நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்திகிறேன். ஆகவே த.வெ.க அரைவேக்காடு அமைச்சர்களே இனியும் நீங்கள் ஆள் பிடிக்கிற வேலையை நியாயப்படுத்துவதற்காக இதுபோன்று  கற்பனை கதைகளை கட்டவிழ்த்து விடுவதை நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று  அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுகிறேன்". என்றார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

உயர்நீதிமன்ற உத்தரவு: விருதுநகரில் சீமைக் கருவேல அகற்றும் பணிகளை நீதிபதி செல்வம் ஆய்வு!
உயர்நீதிமன்ற உத்தரவு: விருதுநகரில் சீமைக் கருவேல அகற்றும் பணிகளை நீதிபதி செல்வம் ஆய்வு!
Madurai Power Shutdown (30.07.2026) : மதுரை மாவட்டத்தில் நாளை மின்தடை : உங்கள் ஊரில் கரண்ட் இருக்கா? தெரிந்து கொள்ளுங்கள்!
Madurai Power Shutdown (30.07.2026) : மதுரை மாவட்டத்தில் நாளை மின்தடை : உங்கள் ஊரில் கரண்ட் இருக்கா? தெரிந்து கொள்ளுங்கள்!
மதுரை மல்லிகை விலை ரூ.800... மேலும் உயருமா? ஆடி வெள்ளிக்கு டாப்புக்கு போகுமா !
மதுரை மல்லிகை விலை ரூ.800... மேலும் உயருமா? ஆடி வெள்ளக்கு டாப்புக்கு போகுமா !
Madurai ; பொதிகை ரயிலில் ராணுவ வீரரை தாக்கிய டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட் !
Madurai ; பொதிகை ரயிலில் ராணுவ வீரரை தாக்கிய டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
Tata Punch EV 5 star Rating: ‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
TVS Raider 125: ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
Embed widget