மேலும் அறிய

மதுரை மல்லிகை விலை ரூ.800... மேலும் உயருமா? ஆடி வெள்ளிக்கு டாப்புக்கு போகுமா !

மதுரை மல்லிகையை பொறுத்த வரை நான்கு டன்னுக்கும் குறைவாகவே பூக்கள் வரத்து உள்ளது. தற்போது விசேஷ காலம் என்பதால் இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

ஆடி வெள்ளி: மதுரை மல்லிகை கிலோ ரூ.800க்கு விற்பனை - மேலும் கூடுவதற்கு வாய்ப்பு  - வியாபாரிகள் தகவல்.

மதுரை மல்லிகைப் பூ விற்பனை ஜோர்

மதுரை மல்லி என்பது மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படும் சிறப்பு வாய்ந்த பூவாகும். மதுரை மையமாக உள்ளதால் மல்லிகைப் பூ மற்றும் பிற பூக்களுக்கு வணிகம் செய்ய ஏதுவாக உள்ளது. குறிப்பாக மல்லிகைப் பூ கி.மு 300-ஆம் ஆண்டிலிருந்து பயிரிடப்பட்டு வருகின்றன. இதற்கான குறிப்புகள் சங்க இலக்கியங்களில் மற்றும் கோயில் சிற்பங்களில் காணப்படுகின்றன. இப்பூக்கள் தங்களது தனித்துவமான மணம் மற்றும் நறுமணத்திற்காக பிரசித்தி பெற்றவை. இதனால் வெளியூர் பயணிகள் மதுரை வரும் போது மல்லிகைப் பூவை விரும்பி வாங்குகின்றனர். இதே போல் கோயில் நகரமான மதுரையில் பிற பூக்களின் விற்பனையும் எப்போது சூடுபறக்கும். இந்நிலையில் தீபாவளியை தொடர்ந்து மதுரையில் பூக்களின் விலை எப்படி உள்ளது என்பதை காணலாம்.

விலை நிலவரம் அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும்

ஆடி மாத கோயில் திருவிழாக்கள் மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு மதுரை மல்லிகை கிலோ ரூ.800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரத்து குறைவாக உள்ளதாலும் திருவிழா காலம் என்பதாலும் இந்த விலை நிலவரம் அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என வியாபாரிகள் கருத்து. மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது மலர் வணிக வளாகம். இங்கு வாடிப்பட்டி அலங்காநல்லூர் பாலமேடு திருப்பரங்குன்றம் திருமங்கலம் வலையங்குளம் சிலைமான் வரிச்சியூர் மேலூர் கொட்டாம்பட்டி ஆகிய பகுதிகளில் விளைவிக்கப்படுகின்ற. பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. மேலும் அண்டை மாவட்டங்களான திண்டுக்கல் தேனி சிவகங்கை இராமநாதபுரம் விருதுநகர் மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் வியாபாரிகளால் மதுரை மலர் சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. 

மதுரை மல்லிகைக்கு உலகளாவிய சந்தை வாய்ப்பு உண்டு

மேற்கண்ட பகுதிகளில் விளையும் மதுரை மல்லிகைக்கு உலகளாவிய சந்தை வாய்ப்பு உண்டு. இதன் நறுமணம், நீடித்த தன்மை போன்றவை காரணமாக மதுரை மல்லிகைக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கி உள்ளது. இதன் காரணமாக மதுரையிலிருந்து துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கும், மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரூ.400-ரூ.500க்கு விற்பனையாகி வந்த மதுரை மல்லிகை இன்று கிலோ ரூ.800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பிற பூக்களின் இன்றைய விலை நிலவரம் பின்வருமாறு:

*முல்லை ரூ.500, *சம்பங்கி ரூ.300, *செவ்வந்தி ரூ.250, *பட்டன் ரோஸ் ரூ.180, *பன்னீர் ரோஸ் ரூ.300 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற பூக்களின் விலையிலும் கணிசமான விலையேற்றம் காணப்படுகிறது.

இது குறித்து மாட்டுத்தாவணி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், தற்போது மழை முழுவதுமாக வைத்துள்ளதால் பூக்கள் உற்பத்தி மிக மிக குறைவாக உள்ளது. மதுரை மல்லிகையை பொறுத்த வரை நான்கு டன்னுக்கும் குறைவாகவே பூக்கள் வரத்து உள்ளது. தற்போது விசேஷ காலம் என்பதால் இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை மல்லிகை விலை ரூ.800... மேலும் உயருமா? ஆடி வெள்ளிக்கு டாப்புக்கு போகுமா !
மதுரை மல்லிகை விலை ரூ.800... மேலும் உயருமா? ஆடி வெள்ளக்கு டாப்புக்கு போகுமா !
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
முட்செடிகள் விழுங்கிய வாய்க்கால்கள்... கண்ணீரில் தவிக்கும் பூதலூர் விவசாயிகள்
முட்செடிகள் விழுங்கிய வாய்க்கால்கள்... கண்ணீரில் தவிக்கும் பூதலூர் விவசாயிகள்
விவசாயிகளே உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டுமா? மயிலாடுதுறையில் ஜூலை 30-இல் முக்கிய கூட்டம்!
விவசாயிகளே உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டுமா? மயிலாடுதுறையில் ஜூலை 30-இல் முக்கிய கூட்டம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Gold and silver rate today : சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Embed widget