மேலும் அறிய
Advertisement
தமிழக வெற்றிக் கழகத்தால் அதிமுகவுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை - ஆர்.பி.உதயகுமார்
தவெகவால் அதிமுகவுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை, ஆளும் கட்சியான திமுகவுக்கு தான் தவெக பாதிப்பாக இருக்கும், தவெக கொள்கைகள் வரவேற்கதக்கது.
தமிழக வெற்றிக் கழகத்தால் அதிமுகவுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை, ஆளும் கட்சியான திமுகவுக்கு தான் தவெக பாதிப்பாக இருக்கும் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்தார்.
முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி விழா
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளார். இதனையடுத்து அதிமுக அம்மா பேரவை சார்பில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார்.... "விஜய்யின் மாநாடு சிறந்த துவக்கமாக கிராண்ட் ஒப்பனாக அமைந்துள்ளது. இளைஞர் சமுதாயம் திமுகவை ஏற்றுக் கொள்ளவில்லை என விஜய்யின் மாநாட்டு வாயிலாக புரிந்து கொள்ள முடிகிறது. விஜயின் மாநாட்டில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக பங்கேற்றுள்ளனர். வாரிசு அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தவெக மாநாட்டில் எம்.ஜி.ஆரை சுட்டிக் காட்டி பேசியதை அதிமுக வரவேற்கிறது.
தவெகவால் அதிமுகவுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை
திமுகவை தமிழ்நாட்டு மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்கு தவெக மாநாடு எடுத்துக்காட்டாக உள்ளது. சபரீசனை பார்க்காமல் தமிழகத்தில் யாரும் தொழில் தொடங்க முடியாத சூழல் உள்ளது. தவெகவால் அதிமுகவுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை. ஆளும் கட்சியான திமுகவுக்கு தான் தவெக பாதிப்பாக இருக்கும். தவெக கொள்கைகள் வரவேற்கதக்கது. அதிமுகவின் 52 ஆண்டுகளில் 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. அதிமுக மக்களின் நிரந்தர வாக்கு வங்கியை கொண்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டம் சூட்டியதை தமிழ்நாட்டு மக்கள், இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, இளைஞர் சமுதாயம் கொதித்து போயி விஜய் மாநாட்டுக்கு சென்றுள்ளனர் என கூறினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தலைவரே தலைவரே.. மாநாடு பட ஸ்டைலில் செல்லூரில் செல்லூர் ராஜூவிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Velliangiri Hills: வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு ரூ.5,353 கட்டணமா?: வெடித்த சர்ச்சையால் அரசே விளக்கம்.!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion