மேலும் அறிய

Velliangiri Hills: வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு ரூ.5,353 கட்டணமா?: வெடித்த சர்ச்சையால் அரசே விளக்கம்.!

Velliangiri Hills Trekking: வெள்ளியங்கிரி மலையில் மலையேற்றம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது என்ன? உண்மை நிலவரம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.

கோவை வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மலையேற்றம் செய்வதற்கு ரூ. 5,099 கட்டணத்தை தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ளதாக ஒரு தகவல் பரப்பப்பட்டு வந்த நிலையில், இது விவகாரம் தொடர்பாக அரசு விளக்கமளித்துள்ளது. 

வெள்ளியங்கிரி மலையேற்றம் சர்ச்சை:

வெள்ளியங்கிரி மலையில், பக்தர்கள் செல்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாக கருதபடும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல , திமுக அரசு கட்டணம் விதித்துள்ளது என்றும் தகவல் பரவி வந்தது.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பலர் கருத்து பதிவிட்ட நிலையில், செல்வக்குமார் என்கிற பயணர் ஒருவர் தெரிவித்ததாவது “ வெள்ளியங்கிரி மலை ஏற அரசு ₹5353.95 கட்டணம் விதித்துள்ளது. தெற்கில் உதித்த கைலாயமாக, இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாக வெள்ளியங்கிரி கருதப்படுகிறது. இந்த மலைக்கு, ஆண்டுதோறும் விரதமிருந்து பல லட்சம் மக்கள் பக்தி சிரத்தையுடன் யாத்திரையாக, எந்த கட்டணமும் இல்லாமல் செல்வது வழக்கம்.

கடும் மழை, யானை நடமாட்டம் காரணமாக தை மாதம் முதல் வைகாசி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி. ஆபத்தான மலை பாதையை மேம்படுத்த இதுவரை எந்த ஒரு முயற்சியும் எடுக்காத அரசு, கட்டணம் விதித்து வசூல் செய்ய திட்டமிட்டுள்ளது என தெரிவித்திருந்தார். 

உண்மை என்ன.?

இந்நிலையில், இந்த பதிவை தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழுவானது, இது பொய்யான தகவல் என்றும் விளக்கமும் அளித்துள்ளது. 

அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது “ தமிழ்நாட்டில் உள்ள மலைப்பகுதிகளில் மலையேற்றம் செய்ய வனத்துறை சார்பில் "டிரெக் தமிழ்நாடு” திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் மலையேற்றம் செய்ய ரூ.5,099 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், காப்பீடு, வழிகாட்டி வசதி, இருவேளை உணவு, இருவேளை ஸ்னாக்ஸ்,13 கி மீ வாகனப் பயணம், துணி பேக், தொப்பி, பேனா, பறவைகள் பேம்பிளட் போன்றவை அடங்கும்.

இது முழுக்க முழுக்க டிரெக்கிங் சேவை மட்டுமே. ஆன்மீகப் பயணம் இல்லை. கோயிலுக்கு முன்பே இந்த பயணம் முடிந்துவிடும். பக்தர்கள் மலையேற்றம் செல்லும் மாதங்களில் இந்த டிரெக்கிங் சேவை வழங்கப்படாது. மலையேற்றம் செய்யும் பக்தர்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது. 

Also Read: பாமக, தேமுதிக, நாதக பிடிக்காத இடத்தை விஜய் பிடிப்பாரா: திமுக-அதிமுகவுக்கு மாற்றாக வர விஜய்க்கு என்ன சவால்?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாமக, தேமுதிக, நாதக பிடிக்காத இடத்தை விஜய் பிடிப்பாரா: திமுக-அதிமுகவுக்கு மாற்றாக வர விஜய்க்கு என்ன சவால்?
பாமக, தேமுதிக, நாதக பிடிக்காத இடத்தை விஜய் பிடிப்பாரா: திமுக-அதிமுகவுக்கு மாற்றாக வர விஜய்க்கு என்ன சவால்?
"மண்ணுக்கும், மக்களுக்கும் நலன் பயக்கட்டும்" தம்பி விஜய்க்கு அண்ணன் சீமான் வாழ்த்து!
Kanguva Audio Launch : செவன் சாமுராய் மாதிரியான படம் இது..கங்குவா படம் குறித்து ஒளிப்பதிவாளர் வெற்றி
Kanguva Audio Launch : செவன் சாமுராய் மாதிரியான படம் இது..கங்குவா படம் குறித்து ஒளிப்பதிவாளர் வெற்றி
"வதந்திகளுக்கு எதிராக உடனடியா நடவடிக்கை எடுங்க" சமூக ஊடகங்களுக்கு ஆர்டர் போட்ட மத்திய அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Maanadu : Irfan Explanation letter : அண்ணன் JAPAN-ல் இருப்பதால்.. மன்னிப்பு கடிதத்துடன் வந்த உதவியாளர்!Woman Attacked Telugu Actor| ”திருட்டு பயலே உன்ன விடமாட்ட”வில்லன் நடிகருக்கு அடி!ஆந்திர பெண் ஆவேசம்!Vijay Maanadu : 100 அடி உயரத்தில் கொடி உச்சியில் வைக்கப்பட்ட கலசம்கெத்து காட்டும் விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாமக, தேமுதிக, நாதக பிடிக்காத இடத்தை விஜய் பிடிப்பாரா: திமுக-அதிமுகவுக்கு மாற்றாக வர விஜய்க்கு என்ன சவால்?
பாமக, தேமுதிக, நாதக பிடிக்காத இடத்தை விஜய் பிடிப்பாரா: திமுக-அதிமுகவுக்கு மாற்றாக வர விஜய்க்கு என்ன சவால்?
"மண்ணுக்கும், மக்களுக்கும் நலன் பயக்கட்டும்" தம்பி விஜய்க்கு அண்ணன் சீமான் வாழ்த்து!
Kanguva Audio Launch : செவன் சாமுராய் மாதிரியான படம் இது..கங்குவா படம் குறித்து ஒளிப்பதிவாளர் வெற்றி
Kanguva Audio Launch : செவன் சாமுராய் மாதிரியான படம் இது..கங்குவா படம் குறித்து ஒளிப்பதிவாளர் வெற்றி
"வதந்திகளுக்கு எதிராக உடனடியா நடவடிக்கை எடுங்க" சமூக ஊடகங்களுக்கு ஆர்டர் போட்ட மத்திய அரசு!
Group 4 Results: எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?- டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதில்
Group 4 Results: எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?- டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதில்
TVK Maanadu: அதிமுகவுக்கு நடந்தது நமக்கு நடக்கக் கூடாது.. உணவு விஷயத்தில் விஜய் செய்தது என்ன ? 
TVK Maanadu: அதிமுகவுக்கு நடந்தது நமக்கு நடக்கக் கூடாது.. உணவு விஷயத்தில் விஜய் செய்தது என்ன ? 
TNPSC Reforms: அடுத்தடுத்து அப்டேட்டை அள்ளிக் குவிக்கும் டிஎன்பிஎஸ்சி: போட்டித்தேர்வு கலந்தாய்வுக்கு இத்தனை நாள்தானா?
TNPSC Reforms: அடுத்தடுத்து அப்டேட்டை அள்ளிக் குவிக்கும் டிஎன்பிஎஸ்சி: போட்டித்தேர்வு கலந்தாய்வுக்கு இத்தனை நாள்தானா?
Vijay TVK Politics: விஜய் அரசியல் பயணம் - மக்கள் இயக்கம் தவெக கட்சியாக உருவெடுத்த வரலாறு, விதை போட்டது எங்கே?
Vijay TVK Politics: விஜய் அரசியல் பயணம் - மக்கள் இயக்கம் தவெக கட்சியாக உருவெடுத்த வரலாறு, விதை போட்டது எங்கே?
Embed widget