மேலும் அறிய
Advertisement
சென்னையில் இருந்து குமரி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்
இந்த சிறப்பு ரயிலில் ஒரு இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
பயணிகளின் சிரமத்தை குறைக்க சென்னையில் இருந்து கன்னியகுமரி மற்றும் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சிறப்பு ரயில் சென்னை To கன்னியாகுமரி
பொங்கல் பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நாகர்கோவில் போன்ற நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06093) ஜனவரி 13 அன்று தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும். மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி - தாம்பரம் சிறப்பு ரயில் (06094) ஜனவரி 14 அன்று கன்னியாகுமரியில் இருந்து மாலை 03.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.15 மணிக்கு சென்னை தாம்பரம் சென்று சேரும்.
எதன் வழியாக செல்லும் ?
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை கும்பகோணம் தஞ்சாவூர் திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
நாகர்கோவில் சிறப்பு ரயில்
டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் சிறப்பு ரயில் (06089) ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 01.00 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவில் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06090) ஜனவரி 13 மற்றும் 20 ஆகிய நாட்களில் நாகர்கோவிலில் இருந்து இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும்.
எதன் வழியாக செல்லும்?
இது ரயில்கள் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, மொரப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள்,
6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - India Defence: பாகிஸ்தான, சீனா எல்லையில் இந்தியா எந்த ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளது? இவ்வளவு சக்தி வாய்ந்ததா?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion