மேலும் அறிய

Pongal 2024: மதுரையில் 50 கிராம் மல்லிகை பூ ரூ.150க்கு விற்பனை; மற்ற பூக்களின் விலை என்ன..?

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் நேற்று வரை 1000 ரூபாய்க்கு விற்கப்பட்டு பூக்கள் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகை

தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் பொங்கல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதிலும், குறிப்பாக தென்னிந்தியாவில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் இந்த விழா முக்கியமாக கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் வாரத்தில் ஆண்டுதோறும் வரும் ’பொங்கல்’ என்று அழைக்கப்படும் இந்த திருவிழா உழவர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு பெருவிழாவாக பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரத்தில் மகர சங்கராந்தியைப் போலவே இந்த பண்டிகையும் சூரியன் வழிப்படும் நாளாகும்.

- அரசுப் பள்ளிக்கு ஒன்றரை ஏக்கர் நிலத்தை வழங்கிய பெண்! - சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்த மதுரை எம்.பி

Pongal 2024: மதுரையில் 50 கிராம் மல்லிகை பூ ரூ.150க்கு விற்பனை; மற்ற பூக்களின் விலை என்ன..?

பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17-ஆம் தேதி நிறைவடைகிறது. போகிப் பொங்கல், தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகை ஜனவரி 14, தை பொங்கல் ஜனவரி 15, மாட்டுப் பொங்கல் ஜனவரி 16 மற்றும் காணும் பொங்கல் ஜனவரி 17 அன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மல்லிகை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 3 ஆயிரம் விலை இருந்தாலும் பனி காலத்தில் விளைச்சல் குறைவால் மல்லிகைப் பூ டிமாண்டாக உள்ளது.

Pongal 2024: மதுரையில் 50 கிராம் மல்லிகை பூ ரூ.150க்கு விற்பனை; மற்ற பூக்களின் விலை என்ன..?
 
மதுரை மல்லிகைப் பூ விலை உயர்வு
 
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ 3000 ரூபாய்க்கும், பிச்சிப்பூ மற்றும் முல்லை ஆகிய பூக்களும் கிலோ 2000 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி - 2ஆயிரம், சம்மங்கி , செவ்வந்தி -250,  செண்டுமல்லி -100, அரளி -450, பன்னீர் ரோஸ் -300, பட்டன் ரோஸ் - 250க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மல்லிகைப்பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிலோ 3 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. முல்லை மற்றும் பிச்சி பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 2 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
 
இதேபோல், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி மல்லிகை 3 ஆயிரம் ரூபாய்க்கும், முல்லை 2 ஆயிரம் ரூபாய்க்கும், பிச்சி மற்றும் மெட்ராஸ் மல்லி 1500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.,
 
கடந்த வாரம் வரை சுமார் 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட மல்லிகை விலை இருமடங்கு உயர்ந்து 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் கடந்த வாரம் வரை 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பிச்சி, முல்லை, மெட்ராஸ் மல்லி உள்ளிட்ட பூக்களின் விலை இன்று மூன்று மடங்கு உயர்ந்து 1500 முதல் 2000 வரை விற்பனை செய்யப்படுகிறது.,
 
பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ள சூழலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் பூக்களின் விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள சூழலில் நாளை பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.,
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
Embed widget