மேலும் அறிய

போக்குவரத்து விழிப்புணர்வு ஓவிய போட்டியில் சோர்ந்த மாணவிக்கு ஆறுதல் அளித்த காவல் ஆணையர்.. நெகிழ்ச்சியான சம்பவம் !

விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம், 263 சந்திப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் மத்தியில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளதால் சாலை விபத்து உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

போக்குவரத்து விழிப்புணர்வு ஓவிய போட்டி பரிசளிப்பு விழாவில் சோர்வுடன் நின்ற மாணவி - வாழ்க்கை என்றால் வெற்றி தோல்வியும் வரும் இதனை  கடந்துபோவது தான் வாழ்க்கை - பள்ளி மாணவிக்கு அட்வைஸ் செய்து சிறப்பு பரிசு வழங்கி குடும்பத்துடன் போட்டோ எடுத்துகொண்ட காவல் ஆணையர்.

விழிப்புணர் நிகழ்வு

37ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு இந்தியா முழுவதும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையின் சார்பாக மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சாலை பாதுகாப்பு குறித்த கட்டுரை போட்டி மற்றும் ஓவிய போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர்  லோகநாதன் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். பரிசளிப்பு விழாவின் போது பள்ளி மாணவி சோர்வுடன் இருந்தார். இதனை பார்த்த ஆணையர் லோகநாதன் மாணவியிடம் கேட்டபோது தானும் ஓவியம் வரைந்துள்ளதாக கூறினார். இதை கேட்ட ஆணையர் மாணவிக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறப்பு பரிசை வழங்கினார். அப்போது வெற்றி தோல்வியும் வாழ்க்கையில் வரும் ஆனால் அதையெல்லாம் சமாளித்து முன்னேற வேண்டும் என மாணவிக்கு ஊக்கமளித்தார். பின்னர் மாணவியின் குடும்பத்துடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதையடுத்து மாணவி மகிழ்ச்சயுடன் சென்றார்.

சாலை விபத்து உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து மாணவ மாணவிகள் வரைந்து போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த ஓவியங்களை பார்த்தபோது மாணவி ஒருவர் எழுதிய வாசகங்கள் சிறப்பாக உள்ளதாக பாராட்டி அதனை போக்குவரத்து விழிப்புணர்வுக்கு பயன்படுத்துங்கள் என தெரிவித்தார். இந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள், போக்குவரத்து காவல்துறையினர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் லோகநாதன்...,” மதுரை மாநரில் 60 % பைக்குகளால் அதிகளவிற்கு சாலை விபத்துகளும், 30 சதவிகிதம் சாலைகளில் நடந்துசெல்பவர்களால் சாலை விபத்து நடைபெறுவதாகவும் தெரிவித்தார். இதனை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம், 263 சந்திப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் மத்தியில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளதால் சாலை விபத்து உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget