மேலும் அறிய
Advertisement
சட்டத்துக்கு புறமான பதிவுகளால் தனிமனித சுதந்திரம் பாதிப்பு - தமிழக அரசு
பேஸ்புக், யூ டியூப், டிவிட்டர் பதிவு செய்யப்படும் தனி நபரின் பதிவுகளை உயர் நீதிமன்ற உத்தரவு இல்லாமலோ மத்திய அரசின் உத்தரவு இல்லாமலோ நீக்க முடியாது.
சவுக்கு சங்கரின் வீடியோக்களை நீக்குவது குறித்தான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தை நீதிபதிகளையும் அவதூறாக பேசியதாக நீதிமன்றம் தாமாக முன்வந்து தொடரப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் 6 மாத தண்டனை பெற்று கடலூர் மத்திய சிறையில் உள்ளார்.
இந்நிலையில் சவுக்கு சங்கர் பேசி வீடியோக்களை நீக்க வேண்டும் என ட்விட்டர் பேஸ்புக் யூடுப் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது அந்த உத்தரவை நிறைவேற்றியது சம்பந்தமாக இன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார்.
நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றுவது குறித்து தெரிந்து கொள்ள நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் புகழேந்தி அமர்வு மீண்டும் இந்த வழக்கை இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது youtube பேஸ்புக் டிவிட்டர் நிறுவனத்தின் சார்பாக வழக்கறிஞர்கள் ஆஜராகி தனிப்பட்ட ஒரு பதிவை நீக்க வேண்டும் என்றால் நீதிமன்றம் குறிப்பிட்ட பதிவுக்கான நீக்க கோரி உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் அல்லது மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் இதை தவிர்த்து நாங்களாக நீக்க முடியாது என தெரிவித்தனர்.
தமிழக அரசு சார்பாக ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி சமூகத்தில் அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகங்களுக்கு முரையான கட்டுப்பாடுகள் உள்ளது ஆனால் சமூக வலைதள எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது இதனால் தனிமனித உரிமை பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுகிறது இதை வரைமுறை படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதனை தொடர்ந்து நீதிபதிகள் சமூக வலைதள வழக்கறிஞர்கள் வீடியோ பதிவு செயபவர்கள், யார் அதற்க்கு comment செய்பவர்கள் யார் செய்கிறார்கள் அவர்கள் கண்டுபிடிக்க முடியுமா நடவடிக்கை எடுக்க முடியுமா என கேள்வி எழுப்பினர் .
அதற்கு சமூக வழக்கறிஞர்கள் வலைதளங்களில் பதிவிடுவதற்கு முன்பாக என்ன விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதோ அதை மட்டுமே பார்க்க முடியும் என வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.
மற்றொரு வழக்கு
கழிவறை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தராத மதுரை மாநகராட்சி ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
காரைக்குடியைச் சேர்ந்த மணிகண்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘மதுரை மீனாட்சியம்மன் கோயில் சுற்றுப் பகுதியில் கிழக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதிகளில் மாநகராட்சி தரப்பில் ஒரு நடமாடும் கழிப்பறை இருந்தன. தற்போது இவை மூடப்பட்டுள்ளன. கழிப்பறை இல்லாததால் பெண்கள், முதியோர் பெண் காவலர்கள் மற்றும் பெண் ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ராமேஸ்வரம், பழநி மற்றும் திருச்செந்தூர் ஆகிய இடங்களில் அறநிலையத்துறை தரப்பிலேயே கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருவோருக்கு போதுமான கழிப்பறை வசதி இல்லை. ஏற்கனவே இருந்த கழிப்பறைகள் ஸ்மார்ட் சிட்டி பணியின் போது அகற்றப்பட்டன. எனவே, சித்திரை வீதிகளில் போதுமான கழிப்பறை வசதியை செய்து தரக்கோரி மனு செய்திருந்தேன். இந்த மனு விசாரணையின்போது கழிப்பறை அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதத்தில் முடியும் என மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது. இதனால், அந்த மனு முடிக்கப்பட்டது.
ஆனால், பலமாதங்களாகியும் இதுவரை கழிப்பறை அமைக்கப்படவில்லை. எனவே, மதுரை மாநகராட்சி ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் மதுரை மாநகராட்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை 2 வாரம் ஒத்தி வைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion