திண்டுக்கல்: சாலை வசதி இல்லாத மலை கிராம்; 50 ஆண்டுக்கு மேலாக ஆற்றைக் கடந்து செல்லும் மக்கள்
50 ஆண்டுகளுக்கு மேலாக பாலம் கட்டி தர கோரிக்கை விடுத்தும் பாலம் கட்டாததால் தொடர்ந்து மழை காலங்களில் ஆற்றைக் கடந்து அவதிப்படும் கிராம மக்கள்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சுற்றி உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் சின்னூர் மலை கிராமம். இந்த கிராமமானது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட வெள்ள கெவி ஊராட்சியில் உள்ளது. இந்த மலை கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.
"பொறுமையை சோதிக்க வேண்டாம்" பாலியல் வீடியோ விவகாரத்தில் பேரன் பிரஜ்வலுக்கு தேவகவுடா எச்சரிக்கை!
இந்த சின்னூர் மலை கிராம மக்கள் முதன்மையான தொழில் விவசாயம் மட்டுமே. இங்கு பீன்ஸ், மலைவாழை ஆரஞ்சு, கொய்யா, காபி, பணப் பயிரான ஏலக்காய் உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்படுகிறது. இந்த கிராம மக்கள் விளைவிக்கும் விவசாய விலை பொருட்களை கழுதைகளில் ஏற்றி வந்த பெரியகுளத்தில் உள்ள சந்தைகளில் விற்று வருகின்றனர்.
அவர்கள் கிராமத்திற்கு செல்ல வேண்டுமென்றால் பெரியகுளம் வழியாக சின்னையம் பாளையம் வரை ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்து ஒத்தையடி பாதையில் உள்ள கல்லாறு, குப்பாம் பாறை ஆறு ஆகிய 2 ஆறுகளை கடந்து செல்லலும் நிலை தான் தற்பொழுது வரையில் உள்ளது. பல நூறு ஆண்டுகளாக வாழும் இந்த மலை கிராம மக்களுக்கு இன்று வரையில் ஆற்றுப்பகுதியை கடப்பதற்கு பாலம் கட்டப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் கல்லாற்றில் பெரும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டபோது மலை கிராமத்தைச் சேர்ந்த நான்கு நபர்கள் ஆற்றின் நடுவே சிக்கி தவித்தனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேரம் போராடி கயிறு கட்டி மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து கல்லாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நீரின் அளவு குறைந்ததால் மலை கிராமத்திற்கு செல்ல வேண்டிய மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஆற்றின் குறுக்கே இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஆர்ப்பரித்துச் செல்லும் நீரில் ஆற்றின் நடுவே கைகோர்த்து நின்று உணவுப் பொருட்கள், மற்றும் உடைமைகளை ஆற்றின் மறுகரைக்கு கடத்திய பின்பு பொது மக்களையும் மறுகரைக்கு கடத்தி கூட்டி செல்கின்றனர்.
TN Weather Update: தமிழகத்திற்கு பாதிப்பா? REMAL புயலின் தாக்கம் எங்கெல்லாம்? - முழு விவரம்
இதுகுறித்து மலை கிராம மக்கள் கூறுகையில், தங்கள் மறை கிராமத்திற்கு சாலை வசதி வேண்டாம் . ஆனால் கல்லாற்றைக் கடப்பதற்கு சிமெண்ட் பாலமும் மேல் உள்ள குப்பம்பாறை ஆற்றைக் கடப்பதற்கு இரும்பு பாலமும் கட்டித்தர வேண்டுமென்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.