சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 70 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை - போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 70 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 20000 ஆயிரம் ரூபாய் விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
தேனி மாவட்டம் போடி தாலுகாவிற்கு உட்பட்ட தேவாரம் பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு கடையில் மிட்டாய் வாங்கி விட்டு வீடு திரும்பிய 6 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்ற 70 வயது முதியவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.
அப்பொழுது கடைக்குச் சென்ற சிறுமியை காணவில்லை என சிறுமியின் தாய் மற்றும் உறவினர்கள் தேடிய பொழுது முதியவர் காளிமுத்து வீட்டிற்குள் அழைத்துச் சென்ற விவரம் தெரியவே அங்கு நேரடியாக சென்று பார்த்த போது சிறுமி அழுது கொண்டிருந்த நிலையில் முதியவர் தப்பிச் சென்றுள்ளார். இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதியவர் மீது போச்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவு பெற்று சாட்சியங்களின் அடிப்படையில் முதியவர் காளிமுத்து குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு குற்றவாளிக்கு போக்சோ சட்டம் 6ன் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 20,000 ஆயிரம் ரூபாய் அபராதம், அதைக் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு மெய்க்காவல் சிறை தண்டனை விதித்து போச்சோ சிறப்பு நீதி மன்ற நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து குற்றவாளியை சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.