மேலும் அறிய
Advertisement
ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் பார்க்க வேண்டும் - மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
ஜல்லிக்கட்டு போட்டியில் மல்லுக்கட்ட காளைகளை உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் பார்க்க ஏற்பாடு செய்து தர கோரி மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வெகு விமரிசையாக நடைபெறும். குறிப்பாக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் மிகவும் முக்கியமானது.
ஜல்லிக்கட்டு போட்டியில் மல்லுக்கட்ட காளைகளை உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர். தங்களது காளைகளுக்கு சீறிப்பாயுதல், வீரர்களுக்கு போக்கு காட்டுதல், மண்குவியலை குத்துதல், நீச்சல் பயிற்சி, மூச்சு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை உரிமையாளர்கள் அளிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்தாண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை மாற்றுத்திறனாளிகள் நேரில் சென்று பார்வையிடுவதற்கு சிறப்பு இருக்கைகள் ,அழைத்துசெல்ல வாகனங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்து தர கோரி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மதுரை மாநகராட்சி 23- வது வார்டு மாமன்ற உறுப்பினர் குமரவேல் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் பார்வையிட சிறப்பு இருக்கைகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.
க்ரைம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை தீயிட்டு கொளுத்திய காதலன் - இளம்பெண் உயிரிழப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion