பங்குனி உத்திர திருவிழா; பழனியில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு - கூடுதல் பேருந்துகள் இயக்கம்
திண்டுக்கல் பழனி மலை முருகன் கோயிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு கூடுதல் பேருந்து இயக்கம்.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் வருகிற 4-ந்தேதி பங்குனி உத்திர திருவிழா நடைபெறுகிறது. இந்த பங்குனி உத்திர திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு பழனிக்கு வரத்தொடங்கி உள்ளனர். மேலும் வருகிற 3-ந்தேதி முதல் பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கி விடும். அதேநேரம் பிற ஊர்களில் இருந்து பழனிக்கு போதிய அளவில் ரயில் சேவை இல்லை.
Panguni Uthiram: பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
இதனால் வெளியூர் பக்தர்கள் பேருந்துகளில் தான் பயணித்து வரும் நிலை உள்ளது. எனவே பக்தர்கள் சிரமமின்றி பழனிக்கு வந்து செல்லும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.அதன்படி திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, பொள்ளாச்சி, சேலம் ஆகிய ஊர்களில் இருந்து பழனிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இதேபோல் பழனியில் இருந்து பிற ஊர்களுக்கு பக்தர்கள் திரும்பி செல்வதற்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் பங்குனி உத்திர திருவிழாவுக்கு 150 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை தொடர்ந்து இயக்கப்படுகிறது. மேலும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில், அதற்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்து உள்ளது. இதேபோல் பக்தர்களுக்கு உதவும் வகையில், பழனி உள்பட மேற்கண்ட ஊர்களின் பேருந்து நிலையத்தில் வழிகாட்டி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்