மேலும் அறிய

GT vs CSK IPL 2023: ஐ.பி.எல். தொடக்க போட்டி..! நேருக்கு நேர் மோதும் சென்னை - குஜராத்..! வெற்றியுடன் தொடங்கப்போவது யார்?

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளில் (GT vs CSK Match Preview) வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளில் (GT vs CSK Match Preview) வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

16வது சீசன் ஐபிஎல்:

நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான முதல் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணியை, நான்கு முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை அணி எதிர்கொள்ள உள்ளது. இந்திய நேரப்படி, மாலை 7.30 மணியளவில் இந்த போட்டி தொடங்க உள்ளது. இதனிடையே, தொடரின் முதல் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 

குஜராத் அணி விவரம்:

ஐபிஎல் தொடரில் அறிமுகமான முதல் சீசனிலேயே கோப்பையை வென்ற குஜராத் அணி, அதே உத்வேகத்துடன் முதல் போட்டியிலேயே களமிறங்க உள்ளது. டேவிட் மில்லர், கேன் வில்லியம்சன், ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், ராகுல் திவேதியா மற்றும் ஸ்ரீகர் பரத் ஆகிய அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் வீரர்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பிட்ட வீரர்கள் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால், குஜராத் அணி பேட்டிங்கில் வலுவாக உள்ளது.

பந்துவீச்சிலும் சற்றும் சளைக்காத அந்த அணி ரஷித் கான், ஷமி, மோஹித் சர்மா, பிரதீப் சங்வான், அல்ஜாரி ஜோசப், யாஷ் தயால் மற்றும் ஓடியன் ஸ்மித் அகிய உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. அதோடு, முதல் போட்டி உள்ளூர் மைதானத்தில் நடைபெறுவது குஜராத் அணிக்கு சாதகமாக கருதப்படுகிறது.

சென்னை அணி விவரம்:

ஐபிஎல் தொடரில் இதுவரை 4 முறை கோப்பையை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு ஆரம்பம் முதலே தோனி தலைமையில் களமிறங்க உள்ளது. கடந்த ஆண்டு இந்த அணி 14 போட்டிகளில் விளையாடி, வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை பிடித்தது. இந்நிலையில், தோனிக்கு இது கடைசி தொடர் என கூறப்படுவதால், இந்த ஆண்டு சென்னை கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர்.

பேட்டிங்கை பொறுத்தவரை தோனி, அம்பத்தி ராயுடு, கெய்க்வாட், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி மற்றும் கான்வே ஆகியோர் உள்ளனர். இதேபோன்று முக்கிய பந்துவீச்சாளர்களாக ஜடேஜா, தீபக் சாஹர், மஹேஷ் தீக்சனா, முகேஷ் சவுத்ரி ஆகியோர் உள்ளனர். ஆல்ரவுண்டர்களான ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி ஆகியோர் சென்னை அணிக்கு நம்பிக்கை அளிக்கின்றனர். அதேநேரம், பல வீரர்களின் வயது 30-ஐ கடந்து இருப்பது சென்னை அணிக்கு சற்றே பின்னடைவாக கருதப்படுகிறது. ஆனாலும், அந்த அனுபவம் அவர்களது பலமாக உள்ளது.

நேருக்கு நேர்:

சென்னை மற்றும் குஜராத் அணிகள் இதுவரை இரண்டு முறை மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இரண்டு போட்டிகளிலும் குஜராத் அணி வெற்றி பெற்றுள்ளது. 

மைதானம் & டாஸ் விவரம்:

அகமதாபாத் மைதானத்தில் இதுவரை 10 டி-20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 6 முறையும், சேஸ் செய்த அணிகள் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் சராசரி ஸ்கோர் என்பது 160. அதேநேரம், இரண்டாவது இன்னிங்ஸில் சராசரி ஸ்கோர் 137. இந்த போட்டியில் டாஸ் வென்ற அணி, முதலில் பந்துவிச்சை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை உத்தேச அணி:

கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, சிவம் துபே, அம்பதி ராயுடு, பென் ஸ்டோக்ஸ், ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா

குஜராத் உத்தேச அணி:

ஷுப்மான் கில், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், மேத்யூ வேட், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், சிவம் மாவி, முகமது ஷமி, ஜோசுவா லிட்டில்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget