பழனியில் பழைய பெட்டிகளுடன் ரோப்கார் சேவை மீண்டும் துவக்கம்
உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் பயணிகள் செல்ல அமைக்கப்பட்டுள்ள ரோப்கார் சேவையில் புதிய பெட்டிகளை அகற்றிவிட்டு பழைய பெட்டிகளுடன் மீண்டும் சேவை துவக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், படிப்பாதை, யானை பாதை, மின்இழுவை ரயில், ரோப் கார் சேவை மூலமாக மலைக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ரோப்கார் சேவை மாதத்திற்கு ஒருநாளும் வருடத்திற்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
AIADMK Hunger Strike: முன்னாள் முதலமைச்சர் ஈ.பி.எஸ் கைது.. தடையை மீறி போராட்டம்.. போலீஸ் நடவடிக்கை..
ரோப்கார் சேவை காலை 7 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை செயல்படுகிறது. ஒரு பெட்டிக்கு நான்கு பேர் விதம் நான்கு பெட்டிகளில் 16 பேர் பயணம் செய்யலாம். இந்நிலையில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சென்ற 15ம் தேதி சனிக்கிழமை நவபாஷாண சிலை பாதுகாப்பு குழுவினர் திருக்கோயில் தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. பின்னர் உச்சிகால பூஜையில் தரிசனம் செய்வதற்காக குழுவினர் மலைக்கு சென்றனர்.
இவர்கள் மலைக்கோயிலுக்கு ரோப்காரில் சென்ற அடுத்த 20 நிமிடத்தில் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்ற போது அதிகபாரம் ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ரோப் கார் பாறையில் மோதியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதி வழியில் நின்றதையடுத்து ரோப் கார் ஊழியர்கள் உடனடியாக பார்வையிட்டனர். இதனையடுத்து பெட்டிகளில் சிறிய சேதம் ஏற்பட்டது. இதனால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பழனி கோயிலுக்கு 15 பேர் கொண்ட நவபாசன சிலை பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு மலைக்கோயிலுக்கு சென்ற சிறிது நேரத்திலேயே ரோப்கார் பாறையில் மோதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தான் பழைய பெட்டிகள் நீக்கப்பட்டு புதிய பெட்டிகள் பொருத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் மீண்டும் ரோப்காரில் பொருத்தப்பட்டிருந்த 8 புது பெட்டிகளை கழற்றிவிட்டு மீண்டும் பழைய பெட்டியை பொருத்தினர். பின்னர் அந்த பெட்டிகளில் அதிக எடை வைத்து, கோவில் இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில் சோதனை செய்யப்பட்டது. பின்பு அனைத்து செயல்பாடுகளும் திருப்த்தி அளித்ததை தொடர்ந்து மீண்டும் ரோப்கார் சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று மாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டு, ரோப்கார் சேவை தொடங்கியது. இதில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் மலைக்கோவிலுக்கு சென்று வந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்