மேலும் அறிய

கேரளாவில் பாகிஸ்தான் உளவாளிக்கு சிவப்பு கம்பளம்? சுற்றுலாத்துறை சர்ச்சையில் சிக்கியதா?

கேரள சுற்றுலாத்துறையின் விருந்தினராக பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளாவுக்கு வந்துள்ளார் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தற்போது தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கேரள அரசின் சுற்றுலாத்துறை பிரச்சாரத்தில் ஈடுபட்டது தற்போது வெளியாகி உள்ளது. கேரளாவின் பிரபல பத்திரிக்கையான மாத்ருபூமி பத்திரிகை சார்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மாநில அரசு அளித்த பதிலில், கேரள சுற்றுலாத்துறையை விளம்பரப்படுத்தும் நோக்கில் 41 சமூக ஊடக செல்வாக்காளர்களுக்கு கேரள சுற்றுலாத்துறை அழைப்பு விடுத்தது தெரியவந்துள்ளது. அவர்களின் பயணம், தங்குமிடம், உணவு ஆகியவற்றுக்கான செலவை கேரள சுற்றுலாத்துறை ஏற்றுக்கொண்டது. அவ்வாறு வந்தவர்கள் கேரளாவின் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்குச் சென்று வீடியோக்களை எடுத்து வெளியிட்டனர். அவ்வாறு வந்தவர்களில் ஜோதி மல்ஹோத்ராவும் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பாகிஸ்தான் உளவாளிக்கு சிவப்பு கம்பளம்? சுற்றுலாத்துறை சர்ச்சையில் சிக்கியதா?

இந்த செய்தி கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள கேரள சுற்றுாலத்துறை அமைச்சர் முகம்மது ரியாஸ், “கேரள சுற்றுலாத்துறையை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை அது. சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்க பலர் அழைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவராக ஜோதி மல்ஹோத்ராவும் அழைக்கப்பட்டார். அனைத்தும் வெளிப்படையாகவும் நல்ல நோக்கத்துடனும் செய்யப்பட்டன.

கேரளாவில் உள்ள இடது முன்னணி அரசு உளவு பார்க்க உதவும் அரசு அல்ல. அரசு அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நடந்த நிகழ்வு முழுக்க முழுக்க கேரள சுற்றுலாத்துறையின் பிரச்சாரத்துக்கானது. உளவாளி என்று தெரிந்தே அரசு ஒருவரை அழைக்காது" என தெரிவித்துள்ளார். எனினும், கேரள இடது முன்னணி அரசுக்கு எதிராக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. ஒருவரின் பின்னணி பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமல் ஒரு அரசு எவ்வாறு அவருக்கு அழைப்பு விடுக்கலாம் என அவை கேள்வி எழுப்பி உள்ளன.

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் பூனவல்லா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கேரள சுற்றுலாத்துறையின் விருந்தினராக பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளாவுக்கு வந்துள்ளார் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தற்போது தெரியவந்துள்ளது. பாரத மாதாவுக்கு தடை விதிப்பார்கள்(கேரள ஆளுநர் மாளிகையில் பாரத மாதா படம் இருப்பதற்கு கேரள அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டுகிறார்) ஆனால், பாகிஸ்தான் உளவாளிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பார்களா?

கேரளாவில் பாகிஸ்தான் உளவாளிக்கு சிவப்பு கம்பளம்? சுற்றுலாத்துறை சர்ச்சையில் சிக்கியதா?

சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ், முதல்வர் பினராயி விஜயனின் மருமகன். அவரை பதவி நீக்கம் செய்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார். ஹரியானாவின் ஹிசார் நகரைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா, கேரளாவில் தான் எடுத்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலிலும், பிற சமூக ஊடகங்களிலும் வெளியிட்டுள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானின் லாகூர் வீதிகளில், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களின் பாதுகாப்புடன் ஜோதி மல்ஹோத்ரா வீடியோ எடுத்தது வெளியாகி அவருக்கு உள்ள பாகிஸ்தான் தொடர்பை அம்பலப்படுத்தியது. மேலும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு சில தினங்களுக்கு முன்பு அவர் பாகிஸ்தான் சென்றதும் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இனி நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆளை மாத்த முடியாது; 2 கட்ட சரிபார்ப்பு- லைவ் போட்டோ, முக பயோமெட்ரிக் கட்டாயம்!
இனி நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆளை மாத்த முடியாது; 2 கட்ட சரிபார்ப்பு- லைவ் போட்டோ, முக பயோமெட்ரிக் கட்டாயம்!
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிப்பதா? அரசுப் பணிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரணம் அளிக்க வேண்டுகோள்!!
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிப்பதா? அரசுப் பணிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரணம் அளிக்க வேண்டுகோள்!!
DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
ABP Premium

வீடியோ

Priyanka Gandhi to lead Congress | ராகுல் தலைமைக்கு ENDCARD?பவருக்கு வரும் பிரியங்கா?
தவெகவை டிக் அடித்த OPS? செங்கோட்டையனின் HINT! விஜய்யின் புது கணக்கு
”HINDUS 4 குழந்தை பெத்துக்கணும்! MUSLIMS-அ விடக் கூடாது” பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு
”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆளை மாத்த முடியாது; 2 கட்ட சரிபார்ப்பு- லைவ் போட்டோ, முக பயோமெட்ரிக் கட்டாயம்!
இனி நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆளை மாத்த முடியாது; 2 கட்ட சரிபார்ப்பு- லைவ் போட்டோ, முக பயோமெட்ரிக் கட்டாயம்!
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிப்பதா? அரசுப் பணிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரணம் அளிக்க வேண்டுகோள்!!
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிப்பதா? அரசுப் பணிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரணம் அளிக்க வேண்டுகோள்!!
DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
Idiyappam: இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
Embed widget