மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என்பது ஐந்து தலைமுறையாக வேலை பார்த்து வருகிற தோட்ட தொழிலாளர்களின் விருப்பம் என ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
 
முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுடன் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் கூறுகையில்: 
 
நாடாளுமன்றத் தேர்தல் முடிவு குறித்த கேள்விக்கு
 
நடைபெறுகிற நாடாளுமன்ற பொது தேர்தலில் பா.ஜ.க., அதிக பெரும்பான்மை பெற்று மீண்டும் பாரத பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்பார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசின் ஏற்று நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை குறித்த கேள்விக்கு:
 
ஐந்து தலைமுறையாக வேலை பார்த்து வருகிற தோட்ட தொழிலாளர்களின் விருப்பம் அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று அதைத்தான் நான் அறிக்கை வாயிலாக குறிப்பிட்டுள்ளேன். அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பார்த்து அடுத்த நடவடிக்கை தெரிவிக்கிறேன். 
 
தென் மாவட்டத்தில் ஜாதி பெயரில் கொலைகள் நடப்பது குறித்த கேள்விக்கு:
 
அது விரும்பத்தக்க செயல் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.