மேலும் அறிய

பறை இசையில் அதிர்ந்த தூங்காநகரம்.. மார்கழியை கொண்டாடிய மதுரை.!

மார்கழி மாதத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது, மங்கள இசைக்கும், நாட்டுப்புற இசைக்கும் வேறுபாடில்லை என  திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்தார்

மார்கழியில் மக்களிசை என்ற தலைப்பில்  நேற்று மாலை மதுரை காந்தி அருங்காட்சியகத்தில்  நடைபெற்ற இசை  நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட தாரை தப்பட்டை, மேளம் மற்றும் கரகாட்டம், ஒப்பாரி, பாடகர்கள் கலந்துகொண்டு மேடையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித், மதுரை எம்.பி சு.வெங்கடேசன், எவிடென்ஸ் கதிர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டர்.

பறை இசையில் அதிர்ந்த தூங்காநகரம்.. மார்கழியை கொண்டாடிய மதுரை.!
 
கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் செய்தியாளர்களிடம்...,” மார்கழியில் மக்களிசை பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டு இன்று மதுரையிலும் மற்றும் நாளை கோவையில் நடத்துகிறோம், மேலும் வரும் 24முதல் 31ஆம் தேதி வரை 7நாட்கள் தொடர்ச்சியாக பல்வேறு சபாக்களில் சென்னையில் நடைபெறுகிறது. நாட்டுப்புற இசைக்கலையை மக்களுக்கானதாக மாற்றுவதற்கான முயற்சியாக இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளோம். மக்களுக்கான இசையை மக்களிடத்தில் கொண்டு செல்கிறோம் எனவும், மார்கழி என்பது தமிழ் மாதம் இதனை யாரும் உரிமை கொண்டாட முடியாது. மங்கள இசையும் நாட்டுப்புற இசையும் நம் மண் சார்ந்தது தான் எனவும், நாட்டுப்புற பாடல்கள் வாழ்வியல் சம்மந்தப்பட்ட தினசரி விசயங்களை இசை வடிவமாக கொண்டுவருவது தான் , இதனை சிஸ்டமாக உருவாக்கி வைத்துள்ளோம் தற்போது அதற்கான இடம் கிடைத்துள்ளது என்றார்.

பறை இசையில் அதிர்ந்த தூங்காநகரம்.. மார்கழியை கொண்டாடிய மதுரை.!
சினிமா இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சிக்கு கிடைக்கும் வாய்ப்பு போன்று மண் சார்ந்த இசைக்கலைஞர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு தான் இந்த மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி. நாட்டுப்புற இசையை வேறொரு தளத்திற்கு கொண்டுசெல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது தான் இந்த நிகழ்வுக்கு கிடைத்த வரவேற்பு. இந்த நிகழ்வை சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கும் போது ஆதரவு கிடைக்குமா என எண்ணிய நிலையில் மக்களிடத்தில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தென் தமிழக ஒப்பாரி பாடல் கலைஞர்களை மேடையில் ஏற்ற வேண்டிய வாய்ப்பை இந்த நிகழ்ச்சியில் வழங்கியுள்ளோம். நாட்டுப்புற இசைகளை மேடை ஏற்ற அரசு தரப்பு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம், மக்களிடம் கலையை ஜனநாயக படுத்த வேண்டும் என்ற நோக்கில் இது போன்ற நிகழ்வுகளை நடத்துகிறோம்.

பறை இசையில் அதிர்ந்த தூங்காநகரம்.. மார்கழியை கொண்டாடிய மதுரை.!
சென்னை சங்கமம் மீண்டும் தொடங்கினால் பல கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவே அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நாட்டுப்புற கலைகளை ஊக்கப்படுத்த வேண்டும், கலைகளின் தன்மையை புரிந்து வாய்ப்பு அளித்தால் இந்த கலை அடுத்த பரிமாணத்தை அடையும். சமூகவலைதளங்களின் மூலமாக  உருவாகும் வரவேற்பால் கலைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்துள்ளது. நாட்டுப்புற கலைகளில் இளம் கலைஞர்களை உருவாக்க கல்லூரிகளில் வாய்ப்பும், போதிய விழிப்புணர்வு வழங்க வேண்டும் என்றார்.
 

தலைப்பு செய்திகள்

கரூர் கோவில் நிலங்கள்: பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
கரூர் கோவில் நிலங்கள்: பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
விருதுநகர்: பட்டாசு ஆலை, நீர்நிலை அருகே கல் குவாரி - உயர் நீதிமன்றம் அதிரடி!
விருதுநகர்: பட்டாசு ஆலை, நீர்நிலை அருகே கல் குவாரி - உயர் நீதிமன்றம் அதிரடி!
மதுரையில் அதிரடி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு சீல்!
மதுரையில் அதிரடி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு சீல்!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget