இந்து, கிறிஸ்துவர்களை பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்ற இஸ்லாமியர்கள் - மதுரையில் நெகிழ்ச்சி
சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மதுரை மஸ்ஜித் ரகுமான் பள்ளிவாசலைச் சேர்ந்த நிர்வாகிகள் பள்ளிவாசலுக்குள் அழைத்துச் சென்றனர்.
மதுரை கோரிப்பாளையத்தில் சமூக நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்து கிறிஸ்துவ மதத்தினவர்களை பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று பள்ளிவாசலில் சுற்றி காண்பித்த இஸ்லாமியர்கள்.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மஸ்ஜிதே ரஹ்மான் என்ற பள்ளிவாசல் பழமையானது. இங்கு இந்த பகுதியில் உள்ள ஏராளமான இஸ்லாமியர்கள் நாள்தோறும் தொழுகை நடத்தி இறை வணக்க வழிபாடுகளை செய்துவருகிறார்கள். இந்த நிலையில் பள்ளிவாசலுக்குள் என்ன இருக்கிறது என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக இந்து மற்றும் கிறிஸ்துவ மதத்தினர் மற்றும் கடவுள் நம்பிக்கை மறுப்பாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மதுரை மஸ்ஜித் ரகுமான் பள்ளிவாசலைச் சேர்ந்த நிர்வாகிகள் பள்ளிவாசலுக்குள் அழைத்துச் சென்றனர்.
- வீரன் புலியை கொல்லும் போது - புலி, வீரனை தலையில் தாக்கி கொல்லும் அரிதான சிற்பத்துடன் கூடிய நடுகல்
வாசலில் நின்று பள்ளிவாசலை பார்க்க வந்தவர்களை வரவேற்று அழைத்துசென்று பள்ளிவாசல் முழுவதும் உளு (கை கால்கள் கழுவும் இடம்) செய்யும் இடம், தொழுகை நடத்தும் இடம் ஆகியவற்கை சுற்றி காண்பித்தனர். தொடர்ந்து அவர்களை பள்ளிவாசலில் தொழுகை நடத்தும் அமரவைத்து பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது எவ்வாறு என்பது குறித்தும், எது மாதிரியான உரையாடல்கள் நடைபெறும் என்பது குறித்தும் விளக்கமளித்து தமிழ் குர்ஆனை வழங்கினர். தொடர்ந்து அவர்களுக்கு பள்ளிவாசலுக்கு அமரவைத்து தேநீர் மற்றும் இனிப்புகளை வழங்கி உரையாடல் நிகழ்த்தினர்.
பள்ளிவாசலில் அனைத்து தரப்பினரும் வந்து பார்க்கும் வகையில் சமூக நல்லிணத்தை ஏற்படுத்துவதற்கான மற்ற மதத்தினரை பள்ளிவாசலுக்கு அழைத்து சென்று அனுமதித்து அவர்களுக்கு பள்ளிவாசல் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய இந்து மதத்தினர்,"பள்ளிவாசலில் என்ன இருக்கிறது என்பதை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. இது போன்ற வாய்ப்பு கிடைத்ததால் நேரில் வந்து பார்த்தோம். எவ்வாறு தொழுகை நடத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டோம். சமூக நல்லிணக்கத்தோடு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்று இஸ்லாமியர்கள் அல்லாத மற்ற சமூகத்தினரின் அழைத்து வந்து பள்ளிவாசலில் குறித்து எடுத்துரைத்தது சமூக நல்லிணக்கத்தில் எடுத்துரைக்க முறையில் அமைந்துள்ளது” என்றனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மதுரை மாநகராட்சியை கண்டித்து கையில் துடைப்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்! காரணம் என்ன?
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Leo OTT Release: “அண்ணன் வர்றார் வழிய விடு” .. ஓடிடிக்கு வரும் லியோ படம்.. அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு..!