தென் மேற்கு பருவ மழை தீவிரம்: 136 அடியை எட்டியது முல்லை பெரியாறு அணை!
5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையில் கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை தீவிரத்தின் எதிரொலியால் 136 அடி உயரத்தை எட்டியது. தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,
தமிழகத்தில் தேனி ,திண்டுக்கல் ,ராமநாதபுரம் ,மதுரை ,சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை .இந்த அணையின் 152 அடி உயரம் கொண்டது. இந்த அணையில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து பழனிசெட்டிபட்டி வரை சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பிரதானமாக நெல், வாழை, தென்னை, மருத்துவகுனங்கள் அடங்கிய கருப்பு பன்னீர் திராட்சை என விவசாயம் சார்ந்த பகுதியாகும்.
இதில் முக்கிய பங்காக நெல் விவசாயம் இரண்டு போகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்தநிலையில் கடந்த சில தினங்களாக கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளான முல்லைப்பெரியாறு அணை, தேக்கடி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தற்போது 136 அடியை எட்டியது முல்லை பெரியாறு அணை மேலும் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் இதன் எதிரொலியாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. முல்லைப்பெரியாற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீர் வரத்து வினாடிக்கு 7 ஆயிரத்து 139 கன அடியாகவும், நீர்மட்டம் 133.80 அடியாகவும் இருந்தது. இந்நிலையில் நேற்று அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியது. நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 875 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 900 கன அடிதண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
அணையில் 5 ஆயிரத்து 929 மில்லியன் கன அடி நீர் இருப்பானது இருந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். நேற்று முன்தினம் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாற்றில் 10.4 மி.மீ, தேக்கடியில் 10 மி.மீ மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அணையின் நீர் வரத்து அதிகரிப்பாலும் 136 அடிக்கும் மேல் உயர்ந்து வருவதாலும் தமிழக பொதுப்பணித்துறை சார்பாக முதல் எச்சரிக்கை தகவலை கேரளா இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளது.
தோட்ட வேலைகளை ஆக்கிரமித்த வடமாநிலத்தவர்கள்.. வேலையிழப்பால் அவதிப்படுவதாக தமிழர்கள் வேதனை..!
தேனி: உதவியாளர் இறப்பு, காணாமல் போன மெக்கானிக்.. ஓபிஎஸ் விவகாரத்தை தூசுதட்டும் சிபிசிஐடி