தோட்ட வேலைகளை ஆக்கிரமித்த வடமாநிலத்தவர்கள்.. வேலையிழப்பால் அவதிப்படுவதாக தமிழர்கள் வேதனை..!
கேரளாவில் தோட்ட வேலைகளுக்கு இறக்குமதியாகும் வட மாநிலத்தவர்களால், தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு தோட்ட வேலைக்கு செல்வோர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கிறார்கள்
கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் போடி, கம்பம் ,தேவாரம் , பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கேரளாவில் உள்ள தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் பெரும்பான்மையான வேலையாட்கள் தமிழகத்திலிருந்தே செல்கின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் பரவி வந்ததன் எதிரொலியாக இரு மாநில போக்குவரத்துகள் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கேரளாவில் உள்ள தேயிலைத் தோட்டம், ஏலக்காய் தோட்டங்களில் பராமரிப்பில்லாமல் கிடந்தது.
இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வரும் நிலையில் தற்போது ஊரடங்கு விதிகளில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது வரை குறையாமல் உள்ள நிலையில் தமிழக ,கேரள எல்லையோர பகுதிகளில் உள்ள கேரள மாநிலத்தில் தற்போதும் ஊரடங்கு விதிமுறைகள் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. கேரளாவில் உள்ள தோட்டங்களில் வேலையாட்கள் கிடைப்பதில் பற்றாக்குறையும் வேலையாட்கள் இல்லாத நிலையிலும், தமிழகத்திலிருந்து தோட்ட வேலைக்கு வேலை ஆட்கள் செல்ல முடியாத நிலையிலும் உள்ளது .
இந்த நிலையில் கேரளாவிற்கு சமீப நாட்களாக வடமாநிலத்தை சேர்ந்த வேலை ஆட்கள் அதிகமாக வந்துள்ளதாக தெரிய வருகிறது. கேரளாவில் உள்ள தோட்டங்களில் வேலை செய்வதற்கு பெரும்பாலும் வடமாநிலத்தவர் பணியில் அமர்த்த தோட்ட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கான காரணம் சென்ற ஊரடங்கு நாட்களில் வேலையாட்கள் அதிகமாக வேலை இழந்துள்ள நிலையில் தற்போது வேலைக்கு வருபவர்கள் கூடுதல் ஊதியம் கேட்பதாகவும், ஆதலால் தோட்ட உரிமையாளர்கள் தங்களுக்கு ஊதியம் அதிகமாகக் கொடுக்கும் சூழல் இல்லாத நிலையில், குறைவான ஊதியத்திற்கு வரும் வடமாநிலத்தவர்கள் வைத்து தோட்ட வேலைகளை செய்வதற்கு ஆயத்தமான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக ஏற்கனவே கேரளாவிற்கு தமிழகத்திலிருந்து தோட்ட வேலைக்குச் செல்லும் வேலையாட்கள் வேலை இழந்து வருமானமின்றி இருந்துவரும் நிலையில் தற்போது வடமாநிலத்தவர்கள் கேரளாவில் அதிகமாக பணியில் அமர்த்தப்படுவது தமிழகத்திலிருந்து தோட்ட வேலைக்குச் செல்லும் வேலையாட்கள் தற்போது வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலை உருவாகியுள்ளது. தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு தோட்ட வேலைக்கு செல்வோர்கள் பெரும்பாலும் பெண்களே செல்வதால் வடமாநிலத்தவர்களின் வருகையால் தமிழக தோட்ட தொழிலாளர்களின் வேலையிழப்பு என்பது எளிய குடும்பங்களின் வருமானம் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழக தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தேனியில் சிக்கி தவிக்கும் ஓபிஎஸ். படிக்க,
தேனி: உதவியாளர் இறப்பு, காணாமல் போன மெக்கானிக்.. ஓபிஎஸ் விவகாரத்தை தூசுதட்டும் சிபிசிஐடி
ஆன்லைன் திருட்டு நடப்பது எப்படி, சைபர் கிரைம் போலிசார் எச்சரிக்கை
Cybercrime | ஆன்லைன் திருட்டு நடப்பது இப்படித்தான்... எச்சரிக்கும் போலீசார்!