மேலும் அறிய
Advertisement
பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து முதல்வர் ஆட்சியை வழிநடத்துகிறார் - அமைச்சர் பி.டி.ஆர்
பெண்களுக்கு சம கல்வி, சம உரிமை வேலை வாய்ப்பு என்ற இலக்குகளை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிற சூழ்நிலையில் இன்றைக்கு தமிழ்நாடு மிகச்சிறந்த ஒரு அடுக்கில் உலகிலேயே இருக்கிறது - அமைச்சர் பெருமிதம்
கல்வியோட அடிப்படை தத்துவம் இலக்கு நல்ல மனிதர்களை, நல்ல மாணவர், மாணவிகளை உருவாக்குவது. வெறும் நூலில் இருந்து வர்ற அறிவை மட்டும் இல்லாமல் உடற்பயிற்சி, கலை, கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவற்றிலும் பயிற்சிபெறவேண்டும்.
பள்ளி நிகழ்ச்சியில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
மதுரை ஆரப்பாளையம் திருக்குடும்பம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 39-வது ஆண்டு விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "இத்தகைய நிகழ்ச்சிகளில் முக்கியமான கருத்து எங்கள் திராவிட இயக்கத்தோடு கருத்து, கண்ணுக்கு முன் தெரியும் வகையில் வெளிப்படையாகிறது. ஒரு சமுதாயத்தை உயர்த்தி மக்கள் வாழ்க்கை முறையை உயர்த்த வேண்டும் என்றால், அதில் பெரிய பங்கு பெண்களுடைய கல்விதான். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சியை வழிநடத்தி வருகிறார், முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்த அடிப்படை தத்துவத்தின் பணி செய்யும் எங்கள் அனைவருக்கும் இத்தகைய நிறுவனங்கள் மிகவும் முக்கியமாகவும், அதில் பிரியப்பட்டு உள்ளவர்களாகவும் நாங்கள் இருக்கிறோம்.
சமுதாயத்துக்கு ஒரு அடையாளம் பெருமை
நூறாண்டுகளாக கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு சம கல்வி, சம உரிமை வேலை வாய்ப்பு என்ற இலக்குகளை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிற சூழ்நிலையில் இன்றைக்கு தமிழ்நாடு மிகச்சிறந்த ஒரு அடுக்கில் உலகிலேயே இருக்கிறது. இளைஞர்கள் கல்லூரி சேரும் சதவிகிதம் பொறுத்தவரை, இந்தியா சராசரியோடு சுமார் இரண்டு மடங்கு அதிகமாக இருந்து கிட்டத்தட்ட 50 சதவீதம் பக்கத்தில் இருக்கின்றன. அதேபோல் இன்றைக்கு தயாரிப்பு நிறுவனங்களின் துறையில் பணி செய்து வரும் பெண்கள், இந்தியா முழுக்க பணி செய்து வரும் பெண்களில் - 42% தமிழ்நாட்டில் மட்டும் இருக்கிறார்கள். இது மிகவும் பெருமைக்குரியது. ஏனென்றால் நம்ம மக்கள் தொகை வெறும் 6% மக்கள் தொகை தான். ஆனால் மாநிலத்தில் சம்மந்தப்பட்ட துறையில் 42% இருக்கிறார்கள் என்றால், அது சமுதாயத்துக்கு ஒரு அடையாளம் பெருமை.
நூல்கள் மட்டும் போதாது
உண்மையில் கூற வேண்டும் என்றால் நீதிக் கட்சி ஆட்சி வருவதற்கு முன் அனைவருக்கும் கல்வி என்ற அரசியல் தத்துவம் இந்த நாட்டிலேயே இல்லை. குறிப்பாக சில சமுதாயங்கள் மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறி அவர்கள் மட்டுமே கல்வி பெரும் சூழ்நிலை. பல நூறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து இருந்தத ஆரம்பக் கல்வி ஆண்களுக்கும், பெண்களுக்கும் என்ற சட்டத்தை 1921 சட்டமன்றத்தில் நிறைவேற்றி அதை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார்கள். கல்வியோட அடிப்படை தத்துவம் இலக்கு நல்ல மனிதர்களை நல்ல மாணவர், மாணவிகளை உருவாக்குவது. வெறும் நூலில் இருந்து வர்ற அறிவை மட்டும் இல்லாமல் உடற்பயிற்சி, கலை, கலாச்சாரம், பண்பாடு இதில் எல்லாம் என் ஜனநாயக விதிமுறைகள் சிவிக்ஸ் என்ற சப்ஜெக்ட் எல்லாம் நல்ல பயிற்சி பெற்றால் வாழ்நாள் முழுவதும் அது உதவியாகவும், அடையாளமாகவும் இருக்கும்” என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என்று மீண்டும் நிரூபித்துள்ளார் - செல்லூர் ராஜூ தாக்கு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - 10th Original Marksheet: ஆக.29 முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; பெறுவது எப்படி?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion