அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என்று மீண்டும் நிரூபித்துள்ளார் - செல்லூர் ராஜூ தாக்கு
திமுகவினரை எதிர்த்தால் அவர்கள் மீது கொடூரமாக நடந்து கொள்ளும். இன்னும் அரசியல் கட்சி தொடங்கவில்லை அதற்குள் விஜயை திமுக அரசு தடுக்கிறது - விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த செல்லூர் ராஜூ
அண்ணாமலை ஓடி வந்து பங்கேற்கிறார்
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசுகையில், "கள்ளர் சீர் அமைப்பு மற்றும் பள்ளிகள், விடுதிகள் ஆகிய கள்ளர் சீரமைப்புதுறையை மூடும் தமிழக அரசின் போக்கை கண்டித்து தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டத்தின் சார்பில் திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
அண்ணாமலையை பற்றி நான் பேசவா..? நான் பேசினா தப்பா போடுவீங்க.? பாக்ஸ் போட்டு மீம்ஸ் போடுவீங்க.! அண்ணாமலையை படத்தை வைத்து ஆட்டின் தலையை வெட்டினார்கள் திமுகவினர். திமுகவின் தலைவர்களை எல்லாம் அவதூறாக பேசியவர் அண்ணாமலை. திராவிட தலைவர்களை அவதூறாக பேசியவர் அண்ணாமலை, குறிப்பா திமுக தலைவர்களை.! அப்படி பேசிய அண்ணாமலை இன்றைக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவில் நூறு ரூபாய் நாணய வெளியிட்டு விழாவில் முதல்வர் கைபேசியில் அழைத்தவுடன் ஓடி சென்று பங்கேற்கிறார். இந்தியாவுக்கு வழிகாட்டி என கலைஞரை அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழ்ந்து பேசுகிறார். இதற்கு முன்பு மோடி தமிழகத்திற்கு வாக்கு கேட்டு வந்தபோது புரட்சி தலைவி அம்மாவை புகழ்ந்தார்.
பாஜக மைனாரிட்டி அரசாக மாறிவிட்டது
திராவிட ஆட்சியில் தமிழகம் பின்னோக்கி சென்றதாக பேசிய அண்ணாமலை, இன்றைக்கு ஆடு தலை வெட்டியது போல "அண்ணாமலை மாட்டிக் கொண்டார்." தலைவர்களின் நாணயங்களை மத்திய அரசின் சார்பில் யாரு வேண்டுமானாலும் வெளியிடலாம். எம்.ஜி.ஆர் 100 ரூபாய் நாணயம், 5 ரூபாய் நாணயம், தபால் தலைகளை வெளியிட்டுள்ளது. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சாதி சமயத்திற்கு அப்பார்பட்டவர்., அனைவருக்குமான தலைவர் என்பதால் நாங்கள் பாஜகவை அழைக்கவில்லை என பொது செயலாளர் கூறியுள்ளார். இந்த விழா மாநில அரசு நடத்திய விழா என எல்.முருகன் தெளிவாக கூறிவிட்டார். ஆனால், திமுக அரசு இதை மத்திய அரசு நடத்திய விழா என முதல்வர் கூறுகிறார். ஈடி ரெய்டு, பல்வேறு வழக்குகளில் இருந்து தப்பிக்க மத்திய அரசை சரிகட்டுவதற்காக தமிழக அரசும் முதல்வர் ஸ்டாலினும் இன்றைக்கு முயற்சிக்கிறார். இன்றைக்கு பாஜக மைனாரிட்டி அரசாக மாறிவிட்டது. அவர்களால் எந்த திட்டத்தையும் கொண்டுவர முடியாது. அனைத்து கட்சியும் எதிர்க்கிறது. திமுகவின் ஆதரவு பாஜகவிற்கு தேவை என்பதால் மத்திய அரசும் திமுக அரசும் இணக்கமாக உள்ளது. திமுகவிற்கு பாஜகவோ அல்லது காங்கிரசினாலோ எந்த ஒரு பாதிப்பு வந்தால் உடனே யார் மத்திய அரசு ஆளுகிறதோ அதற்கு இணக்கமாக செல்வார்கள்.
முதலமைச்சர் பணியை நன்கு செய்ய வேண்டும்
அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என்று மீண்டும் நிரூபித்துள்ளார் ஒரு அரைவேக்கட்டுத்தனமான அரசியல்வாதி. கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா பாஜகவினரை அழைத்து நடத்த வேண்டிய காரணம் என்ன என எடப்பாடி பழனிசாமி கேட்டிருக்கிறார். இதில் என்ன அரசியல் உள்நோக்கம் உள்ளது.? மக்களுக்கு இன்றைக்கு திமுகவினர் வறுமையில் வரி விதித்து விலையை உயர்த்தி இருக்கிறது. இந்த அண்ணாமலை கலைஞரைப் பற்றி எவ்வளவு அவதூறாக பேசியிருக்கிறார். ஆனால் இன்றைக்கு திமுகவிடமிருந்து அழைப்பு வந்துவிட்டால் கூப்பிட்டவுடன் ஓடுகிறார். பாரதிய ஜனதா கட்சியில் அகில இந்திய தலைமை தான். நாளைக்கே அண்ணாமலையை தேசிய தலைமை அவரை மாநில பொறுப்பில் இருந்து இறக்கி விடலாம். இவர் சொல்லி தான் கூட்டணி வைப்பார்களா என்ன.? திமுகவினரை எதிர்த்தால் அவர்கள் மீது கொடூரமாக நடந்து கொள்ளும். இன்னும் அரசியல் கட்சி தொடங்கவில்லை, அதற்குள் விஜயை திமுக அரசு தடுக்கிறது. இந்திய ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சியை ஆரம்பிக்கலாம். விஜயின் அரசியல் கட்சி தொடங்குவதை தடுக்கும் திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை அவர் நல்லா தூங்க வேண்டும் முதலமைச்சர் பணியை நன்கு செய்ய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஏற்கனவே திமுகவினரால் அவருக்கு தூக்கம் கெட்டுள்ளது” என்று தெரிவித்தார்