அதிமுக அழிந்துவிடுமா? எடப்பாடி பழனிசாமி குறித்து ஐ. பெரியசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
எடப்பாடி பழனிசாமி ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படவில்லை - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி
எடப்பாடி பழனிசாமி ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதிமுக கட்சிக்கு தேவை புது உறுப்பினர்கள் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி என்றால் அதிமுக என்ற இயக்கம் இருக்கும். இல்லை என்றால் அந்த இயக்கம் அழிந்துவிடும் - ஐ பெரியசாமி பேட்டி
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான காத்திருப்பு அறை திண்டுக்கல் எம்பி நிதியிலிருந்து ரூ. 24 லட்சத்திற்கு கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி திறந்து வைத்தார். பின் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,
எடப்பாடி பழனிசாமி அமித்ஷா சந்திப்பு குறித்த கேள்விக்கு, எடப்பாடி பழனிச்சாமி முக்காடு போட்டு சென்றது குறித்து அவர் இடம் தான் கேட்க வேண்டும். இரண்டு மாதத்தில் தேர்தல் வரப்போகிறது. 5 வருடமாக எடப்பாடி பழனிச்சாமி எங்கே சென்றார். மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக நான்காண்டு காலம் மக்களுக்காக எந்த ஒரு கோரிக்கையும் வைக்கவில்லை. தேர்தல் வரப்போவதால் மக்களை சந்தித்து வருகிறார். அதை செய்வேன் இதை செய்வேன் என சொல்லிக்கொண்டு இருக்கிறார். மக்களுக்கு தேவையான திட்டங்கள் அனைத்தையும் முதல்வர் ஸ்டாலின் கொடுத்துவிட்டார். இனி கொடுப்பதற்கு எதுவும் இல்லை. 500க்கும் மேற்பட்ட திட்டங்களில் 90% திட்டங்களை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் 100 திட்டங்கள் வரை நிறைவேற்றுவோம். இந்தியாவிலேயே தமிழகம் முன்மாதிரி மாநிலமாக உருவாகியுள்ளது.எடப்பாடி பழனிச்சாமி துணை ஜனாதிபதியை சந்திப்பதாக கூறி அமித்ஷாவை சந்தித்து பேசி உள்ளார் என்பது குறித்த கேள்விக்கு, என்ன நெருக்கடி என்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் தெரியும். சந்திக்கவில்லை என கூறிவிட்டு சந்திப்பது சரியில்லாதது வெளிப்படை தன்மை வேண்டும். கட்சிக்கு நான்தான் பொதுச் செயலாளர் என கூறியுள்ளார். குறுக்கு வழியில் வந்த பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியுள்ளார். எம்ஜிஆர் வைத்த சிஸ்டம் என்னவென்றால், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் உறுப்பினர்களால் மட்டுமே பொதுச் செயலாளராக முடியும் என்ற பைலா உள்ளது. இந்த பைலாவுக்கு முரணாக ஒரு சில பொதுக்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பொதுச்செயலாளர் ஆகியுள்ளார். எடப்பாடி பழனிசாமி ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதிமுக கட்சிக்கு தேவை புது உறுப்பினர்கள் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அப்படி என்றால் அதிமுக என்ற இயக்கம் இருக்கும். இல்லை என்றால் அந்த இயக்கம் அழிந்துவிடும்.உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வேலைப்பளு அதிகமாக இருப்பதாக ஊழியர்கள் கூறியது குறித்த கேள்விக்கு, வேலைப்பளு என்பது இல்லை மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசு ஊழியராக வந்துள்ளோம்.கூடுதலோ குறைச்சலோ வேலைகள் இருக்கும். அதற்காக ஓரிடம், இரண்டு இடம் செல்வோம் என கூற முடியாது. அரசாங்க மக்களுக்கு செய்கின்ற திட்டங்களை கொண்டு சேர்ப்பது அரசு அலுவலர் உடைய கடமை. வேறு பணிகள் செய்யுங்கள் எனக் கூறுவதில்லை. இந்தப் பணிக்கு செல்லுங்கள் என மட்டுமே தெரிவிக்கிறோம். அதிக பளுக்களை வழங்குவதில்லை.ஏழை எளிய மக்களுக்காக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதிய திட்டம் குறித்த கேள்விக்கு. ஓய்வூதிய திட்டம் குறித்து அடுத்த மாதம் நிச்சயமாக நல்ல முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.





















