மேலும் அறிய

அமைச்சரின் ஆதரவாளர்களால் உயிருக்கு ஆபத்து - பாதுகாப்பு கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

அமைச்சர் பெரியகருப்பனின் நேர்முக உதவியாளர் இளங்கோவன் ஆகியோர் தொடர்ந்து தொலைபேசி வாயிலாக என்னை தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் " நான் பல வருடங்களாக தமிழ்நாடு சாலை தொடர்பான ஒப்பந்தங்களை எடுத்து சிறப்பான முறையில் செய்து கொடுத்துள்ளேன். கடந்த 2021 ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஆளும் கட்சியினர் பல்வேறு இடையூறுகளை செய்து வருகின்றனர். 2021ஆண்டு முதல் நான் கலந்து கொண்ட அனைத்து ஒப்பந்தகளிலும், முறையான காரணம் கூறாமல், எனது ஒப்பந்தங்களை நிராகரித்து விட்டு தொடர்ந்து அமைச்சர் பெரிய கருப்பனின் ஆதரவாளர்களுகே ஒப்பந்தங்களை வணங்கி வருகின்றனர்.
 
ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதை அடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபரில் சிவகங்கை மாவட்டம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர், சிவகங்கை ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் சோதனை நடத்தி, 3 லட்சத்து 31ஆயிரம் ரூபாயை கைப்பற்றி, செயற்பொறியாளர் சிவராணி மீது வழக்கு பதிவு செய்தனர். ஒப்பந்தங்களில் தொடர்ந்து ஊழல் நடைபெறுவதை  முறைப்படுத்த கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தேன். இதனால் செயற்பொறியாளர் சிவராணி, அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்களான திமுக துணைச் செயலாளர் திருப்புவனம் சேதுராமன்,  திமுக உறுப்பினர் பள்ளத்தூர் ரவி மற்றும் அமைச்சர் பெரியகருப்பனின் நேர்முக உதவியாளர் இளங்கோவன் ஆகியோர் தொடர்ந்து தொலைபேசி வாயிலாக என்னை தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார்.
 
தமிழ்நாடு அரசு விதித்துள்ள கொரோனா கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூல் செய்த மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சேர்ந்த செல்வராணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு.அதில், "எனது கணவர் கணேசன் துணை வட்டாச்சியராக இருந்து ஓய்வு பெற்றவர். மானாமதுரை ஜெயபால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தபோது கேன்சர் இருப்பதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வில்லை என்றால் உயிருக்கு ஆபத்து என தெரிவித்தனர்.உடனடியாக மதுரையில் உள்ள குரு மருத்துவமனையில் அனுமதித்தோம் அப்போது எனது கணவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரிவிக்கப்பட்டது.அறுவை சிகிச்சை முடிந்த இரண்டு நாட்களில் எந்த ஒரு கொரோனா பரிசோதனை செய்யாமல் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவிற்கு எனது கணவரை மாற்றினர்.

முறையாக பதில் எதுவும் கூறாமல் அடிப்படை வசதிகள் செய்து தராமல் லட்சக்கணக்கில் பணம் கட்டும் படி கூறினார்.எனவே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றுவதாக நாங்கள் கூறினோம். மீண்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் கட்டிவிட்டு அழைத்து செல்லும்படி தெரிவித்தனர். காவல் துறையினரிடம் புகார் அளிப்பதாக தெரிவித்தோம். யாரிடம் வேண்டுமானாலும் புகார் அளித்து கொள்ளுங்கள் எங்களுக்கு முதல்வர் வரை அனைவரையும் தெரியும் எனக்கூறி மீதமுள்ள தொகையை கட்ட வேண்டும் என கூறிவிட்டனர். மொத்தமாக 10 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கட்டியுள்ளோம் ஆனால் அவர்கள் 4 லட்சத்தி 69 ஆயிரத்தி 554 ரூபாய்க்கு மட்டுமே ரசீது கொடுத்தனர் மேலும் நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்கான படிவத்திலும் முறையாக எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த எனது கணவர் ஜனவரி 28 ஆம் தேதி உயிரிழந்தார்.தமிழ்நாடு அரசு விதித்துள்ள கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து பிப்ரவரி 11ஆம் தேதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு செய்தேன். ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.எனவே, எனது மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி, வழக்கு குறித்து தேசிய மருத்துவ கவுன்சில், தமிழ்நாடு மருத்துவ போர்டு, சுகாதாரத்துறை செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர் அவர் பதில் மனு தாக்கல் செய்யவும், மானாமதுரை ஜெயபால் மருத்துவமனை சேர்மன், குரு மருத்துவமனை சேர்மன் மற்றும் விஜயகுமார், திவ்யா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!Chennai Food Festival : ’’பீப் ஏன் இடம்பெறல?’’பொங்கி எழுந்த நீலம்! OFF செய்த அரசு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்துங்க - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
Breaking News LIVE: திமுக அரசு மீது விசிக-வுக்கு எந்த அதிருப்தியும் இல்லை  - திருமாவளவன்
Breaking News LIVE: திமுக அரசு மீது விசிக-வுக்கு எந்த அதிருப்தியும் இல்லை - திருமாவளவன்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
Embed widget