மேலும் அறிய
Advertisement
சாட்டை துரைமுருகன் வார்த்தையை அளந்து பேச வேண்டும் - அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை
அனைத்து வகையான மானியத்துடன் விவசாயிகள் கால்நடை வளர்ப்புக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. மேலும் 36 லட்சம் லிட்டர் பால் விவசாயிகள் மூலம் ஆவின் கொள்முதல் கிடைக்கிறது.
ஆவினில் இணைக்கப்படாத கால்நடைகளுக்கும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பால்வளத்துறை அமைச்சர்
மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஆவின் பால் உற்பத்தி நிலையத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது....,” பால்வளத்துறை நிலையான வளர்ச்சியினை தற்போது கண்டுகொண்டிருக்கிறது. மதுரை மாவட்டத்தில் சென்ற ஆண்டில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள பால், ஒரு லட்சத்து 20 ஆயிரம் இன்றைய தினத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் தாண்டி உள்ளது. அனைத்து கால்நடைகளுக்கும் காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 25,000 கால்நடைகள் ஆவின் பாலகத்தை சார்ந்துள்ளது. ஆவினில் இணைக்கப்படாத கால்நடைகளுக்கும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கால்நடை தீவனம் நியாயமான விலையில் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட வருகிறது. கால்நடை துறையும் பால்வளத்துறையும் இணைந்து விவசாயிகளுக்கு பல அறிவுரைகள் வழங்குகிறது. அனைத்து வகையான மானியத்துடன் விவசாயிகள் கால்நடை வளர்ப்புக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. மேலும் 36 லட்சம் லிட்டர் பால் விவசாயிகள் மூலம் ஆவின் கொள்முதல் கிடைக்கிறது.
குறைந்த விலை தரமான பால்
பொதுமக்கள் மற்றும் முகவர்களுக்கு பால்களை விநியோகம் செய்வதற்கு புதிய நடைமுறைகளை திட்டமிடப்பட்ட வருகிறது. பால் கொள்முதலுக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. தொடர்ந்து ஆவினில் எவ்வித நிதி நெருக்கடி இல்லாமல் செயல்பட்டு வருகிறது. மதுரை ஆவின் 4.5 கோடி ரூபாய் லாபம் ஈட்டுள்ளது. சராசரி மக்களுக்கு மிகக் குறைந்த விலை தரமான பால் வழங்குவதில் ஆவின் பெருமிதம் கொள்கிறது.
தொடர்ந்து சாட்டை துரைமுருகன் பற்றி கேள்விக்கு?
5 முறை முதல்வராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி அவரைப்பற்றி பேசும் சாட்டை துரைமுருகன் அளந்து பேச வேண்டும். தொடர்ந்து சாட்டை துரைமுருகன் பேச்சு ஆறு அறிவு உள்ளவர் பேசுபவர் போல் இல்லை. சீமான் மீண்டும் ஒருமுறை பிறந்து வளர்ந்தால் கூட கலைஞர் கருணாநிதியின் செயலுக்கு ஈடாகாது. குறைந்தபட்சம் மரியாதை உடன் சீமான் பேச வேண்டும். சீமான் போன்றவர்கள் இதுபோன்று பேசி தங்களது மரியாதையை இழக்கிறார்கள். சாட்டை துரைமுருகன் போன்றவர்களுக்கு என்ன வயதாகிறது. மேடையில் பேசும் போது வார்த்தையில் கவனத்துடன் பேச வேண்டும். சாட்டை துறைமுகம் மைக் கிடைத்தால் எது வேண்டுமானாலும் பேசக்கூடாது. திமுகவின் கருத்து சுதந்திரத்தைப் பற்றி திமுகவிற்கு கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை.
உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதல்வர் ஆவார் என்ற கேள்விக்கு:
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவது எங்களுக்கு மகிழ்ச்சியான விஷயம். விவசாயிகளிடமிருந்து பாலை நேரடியாக கொள்முதல் செய்வதற்கு ஆவின் வழிவகை செய்து வருகிறது. அதை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். ஒளிவு மறையற்ற நிர்வாகம் தற்போது ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்று வருகிறது” என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பிற கட்சிகளை சேர்ந்தவர்களை கைது செய்வது சர்வாதிகார போக்காதான் பார்க்கப்படுகிறது - தினகரன்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - NDA Vs INDIA BYpolls: மாஸ் காட்டும் INDIA கூட்டணி - 10 தொகுதிகளில் முன்னிலை - பாஜக கடும் பின்னடைவு - 7 மாநில நிலவரம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
இந்தியா
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion