திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சி பணிகள்; எம்பி கனிமொழி உட்பட நிலைக்குழு உறுப்பினர்கள் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டு ரூ. 34 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டு 34 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழுவின் தலைவரும் , தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார் பட்டியில் உள்ள எத்திலோடு கிராமத்தில் சுமார் ஒன்பது லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான சுய உதவி குழுக்களுக்கான தொழில் கூட கட்டிடத்தினை பாராளுமன்ற நிலை குழு உறுப்பினர்கள் திறந்து வைத்தனர். பிறகு சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சியும் உறுப்பினர்கள் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற நிலைக்குழு தலைவர் கனிமொழி கருணாநிதி அவர்கள், 20 நபர்களுக்கு ரூ.27.50 இலட்சம் மதிப்பிலான வங்கி கடனுதவிகள், 23 நபர்கள் தங்கள் விளைநிலங்களில் பலன் தரும் மரக்கன்றுகள் நடவு செய்வதற்காக ரூ.7.3 இலட்சம் மதிப்பிலான ஆணைகள் என மொத்தம் ரூ.34.80 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தனர். பின்னர் அங்குள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று குழந்தைகளுக்கா அளிக்கப்படும் கற்றல் முறை வழங்கப்படும் உணவுகள் சமையலறை குடிநீர் வசதி சுற்றுப்புற சுகாதாரமாகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
Aditya L1 Countdown : நாளை விண்ணில் செலுத்தப்படும் ஆதித்யா எல்1.. தொடங்கியது கவுண்ட்-டவுன்..
அதிரடி உத்தரவு.. பள்ளி, கல்லூரி, அங்கன்வாடிகள்: சேதமடைந்த கட்டிடங்களை உடனடியாக அப்புறப்படுத்துக..
அதனைத் தொடர்ந்து பிரதான் மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டிய பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு அவர்களுடன் கலந்துரையாடினார்கள். மேலும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் ஏ.கே.பி சின்ராஜ், ராஜ்வீர் டீலர், நரேந்திர குமார், டாக்டர் தலாரி ரங்கய்யா, ஷியாம் சிங் யாதவ், எம்.அப்துல்லா சிர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி மற்றும் அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.