மேலும் அறிய

"ஆட்டத்தை ஆரம்பிக்கும் அஜித்.. முடிச்சு வைக்கப்போகும் விஜய்" இப்படித்தான் இருக்கப்போது 2025!

அஜித்தில் தொடங்கி விஜய்யுடன் புத்தாண்டான 2025ம் ஆண்டு நிறைவடைய உள்ளது. அதன் விவரங்களை கீழே காணலாம்.

பொதுமக்கள் ஒவ்வொரு புத்தாண்டும் தங்கள் வாழ்வில் மாற்றத்தை தருமா? என்று ஆவலுடன் எதிர்பார்ப்பில் இருப்பது வழக்கம். அந்த வகையில், 2024 முடிவுக்கு வந்து 2025ம் ஆண்டு இன்னும் சில தினங்களில் பிறக்கிறது. புத்தாண்டு பிறக்கப்போவதை முன்னிட்டு வியாபாரம், தொழில், திருமணம், படிப்பு என பல திட்டங்கள் மக்கள் தற்போதே வகுக்கத் தொடங்கிவிட்டனர்.

அந்த வகையில், மக்களின் வாழ்க்கையோடு ஒன்றாக பொழுதுபோக்கும், விளையாட்டும் அமைந்துள்ளது. அந்த வகையில், 2025ம் ஆண்டில் தமிழ்நாட்டில் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக என்னென்ன இருக்கப்போகிறது என்பதை கீழே காணலாம்.

அஜித்தின் பொங்கல்:

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் அஜித்குமார். தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக படப்பிடிப்பில் உள்ள படம் விடாமுயற்சி. மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் அடுத்தாண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது.

அஜித்  தற்போது கார் ரேஸில் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதேபோல, அஜித் நடிப்பில் மறுபுறம் தீவிரமாக உருவாகி வரும் குட் பேட் அக்லி படமும் அடுத்தாண்டு வெளியாக உள்ளது. இந்த படம் மே மாதம் கோடை விருந்தாகவோ அல்லது ஆயுத பூஜை கொண்டாட்டமாக  வெளியாக வாய்ப்பு உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி:

உலகின் முன்னணி ஜாம்பவான்களான 8 அணிகள் பங்கேற்க உள்ள சாம்பியன்ஸ்  டிராபி தொடர் வரும் பிப்ரவரி 17ம் தேதி தொடங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என தரவரிசைப் பட்டியலில் முதல் 8 இடத்தில் இருக்கும் அணிகள் இந்த தொடரில் கோப்பைக்காக களமிறங்குகின்றன. இந்த தொடர் 50 ஓவர் வடிவத்தில் நடக்கிறது.

ஐ.பி.எல். தொடர்:

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருப்பது ஐபிஎல் தொடர். சர்வதேச அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஐ.பி.எல். தொடர் வரும் மார்ச் 14ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது. இந்த ஐ.பி.எல். தொடரே தோனிக்கு கடைசி ஐ.பி.எல். தொடராக இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும், ஏலத்திற்கு புதிய வீரர்களுடன் அணிகள் களமிறங்குவதால் இந்த தொடர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் அடுத்தாண்டு ஜூன் 11ம் தேதி நடைபெற உள்ளது. இறுதிப்போட்டிக்குச் செல்லப்போவது யார்? என்பதை தீர்மானிப்பதற்காக தற்போது இறுதிக்கட்ட டெஸ்ட் போட்டிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் இறுதிப்போட்டிக்குச் செல்ல இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மல்லு கட்டி வருகிறது. இவர்களுடன் தென்னாப்பிரிக்கா அணியும் தீவிரமாக போட்டியிட்டு வருகிறது. இதனால், இறுதிப்போட்டிக்கு செல்வது யார்? என்ற போட்டி தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூலி, தக்லைஃப்:

இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகியுள்ள கூலி படமும் அடுத்தாண்டு வெளியாக உள்ளது. ரஜினிகாந்த், நாகர்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்துள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் மே அல்லது ஜூன் மாதத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளது. அதேபோல, கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தக் லைஃப் படமும் அடுத்தாண்டு வெளியாக உள்ளது. இந்த படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார்.

விஜய்யின் தீபாவளி:

தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். கட்சி அறிவிப்பை வெளியிட்ட விஜய் நடிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எச்.வினோத் இயக்கி வரும் இந்த படம் வரும் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது. தீபாவளி விருந்தாக வரும் இந்த படமே விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!
ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!
பக்தர்களே! காசி தமிழ் சங்கமத்திற்கு போக ரெடியா? இந்த இணையதளத்தில் உடனே பதிவு செய்யுங்க
பக்தர்களே! காசி தமிழ் சங்கமத்திற்கு போக ரெடியா? இந்த இணையதளத்தில் பதிவு செய்யுங்க
Seeman : மீண்டும் வெள்ளித்திரையில் சீமான்! LIK படக்குழு வெளியிட்ட அப்டேட்.. குஷியில் தம்பிகள்
Seeman : மீண்டும் வெள்ளித்திரையில் சீமான்! LIK படக்குழு வெளியிட்ட அப்டேட்.. குஷியில் தம்பிகள்
"வேற நாடா இருந்தா RSS தலைவரை கைது செஞ்சிருப்பாங்க" கொதித்த ராகுல் காந்தி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!
ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!
பக்தர்களே! காசி தமிழ் சங்கமத்திற்கு போக ரெடியா? இந்த இணையதளத்தில் உடனே பதிவு செய்யுங்க
பக்தர்களே! காசி தமிழ் சங்கமத்திற்கு போக ரெடியா? இந்த இணையதளத்தில் பதிவு செய்யுங்க
Seeman : மீண்டும் வெள்ளித்திரையில் சீமான்! LIK படக்குழு வெளியிட்ட அப்டேட்.. குஷியில் தம்பிகள்
Seeman : மீண்டும் வெள்ளித்திரையில் சீமான்! LIK படக்குழு வெளியிட்ட அப்டேட்.. குஷியில் தம்பிகள்
"வேற நாடா இருந்தா RSS தலைவரை கைது செஞ்சிருப்பாங்க" கொதித்த ராகுல் காந்தி!
SP Vs DSP: எஸ்பி Vs டிஎஸ்பி - வித்தியாசங்கள், அதிகாரங்கள் என்ன?  என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
SP Vs DSP: எஸ்பி Vs டிஎஸ்பி - வித்தியாசங்கள், அதிகாரங்கள் என்ன? என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
அமைச்சர் பொன்முடி நியாயவாதியா ?   நடப்பது மக்களாட்சியா, போலீஸ் ஆட்சியா? கோபத்தின் உச்சியில் அன்புமணி
அமைச்சர் பொன்முடி நியாயவாதியா ? நடப்பது மக்களாட்சியா, போலீஸ் ஆட்சியா? கோபத்தின் உச்சியில் அன்புமணி
ITR Filing Deadline: இன்றே கடைசி நாள்..! குவியும் அபராதங்களும், பறிபோகும் சலுகைகளும் - வருமான வரி கணக்கு தாக்கல்
ITR Filing Deadline: இன்றே கடைசி நாள்..! குவியும் அபராதங்களும், பறிபோகும் சலுகைகளும் - வருமான வரி கணக்கு தாக்கல்
உதயநிதி ஸ்டாலினால் கைவிட்டுப்போன விஜய் பட வாய்ப்பு...புலம்பும் விடாமுயற்சி இயக்குநர் மகிழ் திருமேணி
உதயநிதி ஸ்டாலினால் கைவிட்டுப்போன விஜய் பட வாய்ப்பு...புலம்பும் விடாமுயற்சி இயக்குநர் மகிழ் திருமேணி
Embed widget