மேலும் அறிய
Advertisement
Madurai: ஜனாதிபதி வருகை....மீனாட்சியம்மன் கோவிலில் பாதுகாப்பு குழு நேரில் பார்வை
பாதுகாப்பு கருதி மதுரை மாவட்டம் முழுவதும் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் வருகை மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் குடியரசுதலைவருக்கான பாதுகாப்பு குழுவினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சிவராத்திரி தினமான வரும் 18ஆம் தேதி அன்று காலை 12 மணி முதல் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்யவுள்ளார். தொடர்ச்சியாக கோவிலில் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசு தலைவர் வருகை மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் குடியரசுதலைவருக்கான பாதுகாப்பு குழுவினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம்.@abpnadu | @SRajaJourno | @LPRABHAKARANPR3 pic.twitter.com/MdxOfwxpcW
— arunchinna (@arunreporter92) February 15, 2023
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வருகை தரவுள்ள நிலையில் கோவிலை சுற்றி இன்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள தங்கு விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருகிறது. இதேபோன்று ரயில் நிலையங்களில், விமான நிலையங்களில் பயணிகளிடம் பாதுகாப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதே போன்று பாதுகாப்பு கருதி மதுரை மாவட்டம் முழுவதும் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீனாட்சியம்மன் கோவிலில் குடியரசு தலைவருக்கான பாதுகாப்பு அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு செய்துவருகின்றனர். இதனை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தலைமையில் அனைத்துதுறை அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் குடியரசு தலைவரின் வருகை, சாமி தரிசனத்திற்கான ஏற்பாடுகள், அன்னதானத்தில் பங்கேற்று குடியரசு தலைவர் உணவு அருந்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது.
இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை, காவல்துறை, உளவுத்துறை, உணவுபாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை ,அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தமிழகம் வரும் ஜனாதிபதி திரௌபதி முர்மு; மதுரை, கோவையில் 2 நாள் சுற்றுப்பயணம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion