மேலும் அறிய
Advertisement
மதுரை : மீனாட்சி அம்மன் கோவில் காணிக்கை எண்ணும் பணி.. மூன்று மாத வருமானம் 73 லட்சம்.. கோவில் நிர்வாகம் தகவல்..
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில்களின் உண்டியல் வருமானம் 73 லட்ச ரூபாய் வசூலாகியுள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள் மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோவிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப் படுகிறது. இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து அதன் வேலை நடைபெறாமல் இருந்த சூழலில் தற்போது மீண்டும் விறுவிறுப்பாக நடைபெற்று, கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வருகிறது.
மதுரையில் தினமும் திருவிழா என்பதுபோல் தினமும் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும். மீனாட்சியம்மன் கோயிலில் வழிபட வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக இனிப்பு வழங்க முடிவு செய்த கோயில் நிர்வாகத்தினர், லட்டு வழங்க முடிவெடுத்து கடத்த ஆட்சி முதல் வழங்கி வருகின்றனர். தற்போது கொரோனா முழு ஊரடங்கு தளர்விற்கு பின் கோவில் திறக்கப்பட்டு தொடர்ந்து லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பிரசாதம் தயாரிப்பதற்கு ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை எரிபொருள் தயாரிக்க வழங்கும் திட்டம் (RUCO) சமீபத்தில் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக ஒரு முறை பயன்படுத்திய 600 லிட்டர் எண்ணெய் பயோ டீசலாக கேன்களில் சேகரிக்கப்பட்டது. மதுரையில் இந்த திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. தற்போது மீனாட்சியம்மன் கோவிலிலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோவில்களின் உண்டியல் வருமானம் 73 லட்ச ரூபாய் வசூல் ஆகியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 11 கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் ஒவ்வொரு மூன்று மாதமும் எண்ணும் பணி நடைபெறும். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது, இதில் கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், உண்டியல் வருமானமாக 73 லட்சத்து 31 ஆயிரத்து 180 ரூபாய் பணம் மற்றும் 590 கிராம் தங்கம், 200 கிராம் வெள்ளி, அயல்நாட்டு பணம் ஆகியவை காணிக்கையாக பெறப்பட்டுள்ளது என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மூன்று மாதத்திலும் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு கோவில் உண்டியல் வருமானம் வரும் நிலையில் ஊரடங்கு காரணமாக கோவில் உண்டியல் வருமானம் குறைந்த அளவே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் மதுரை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion