மேலும் அறிய

மதுரை வடக்கு தொகுதி காங்கிரஸ் உரிமை கோரும்.. மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

காங்கிரஸ் கட்சியின் பலத்தை காட்டுவோம் சும்மா சொல்கிறோம் என்று நினைக்கிறீர்களா. காங்கிரஸ் கட்சிக்காரன் வந்தே மாதரம் ஜே என்று சொல்வது மட்டும் கிடையாது. திருப்பி அடிக்க தெரியும். - மாணிக்கம் தாகூர்.

மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சி கோரும் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் கட்சியை பொறுத்த அளவில் மதுரை வடக்கு தொகுதியை கேட்டு பெற வேண்டும் என்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரை சந்தித்து பேசினேன்.
 
மாணிக்கம் தாகூர் பேட்டி
 
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மாலை அணிவித்து மரியாதை செய்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது...," மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சி கோரும் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் கட்சியை பொறுத்த அளவில் மதுரை வடக்கு தொகுதியை கேட்டு பெற வேண்டும் என்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரை சந்தித்து பேசினேன். என்னை பொறுத்த அளவில் காங்கிரஸ் கட்சியை யாரெல்லாம் அவமானப்படுத்துகிறார்களோ யாரெல்லாம் இழிவாக பேசுகிறார்களோ அவர்களிடம் எந்தவித தயவுசெய்து பார்ப்பதற்கு இல்லை. எங்களைப் பொறுத்த அளவில் காங்கிரஸ் கட்சியின் தன்மானம் மிக முக்கியமானது காங்கிரஸ் கட்சிக்காரரின் தன்மானம் மிக முக்கியமானது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஒரு நீண்ட பதிவை செய்திருந்தார்.
 
வன்மத்தை கடுமையாக எதிர்க்கிறோம்
 
அதில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களை இழிவுபடுத்துவதோ அவமதிப்பதையோ எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் அமைப்பு ரீதியாக 85 சதவீத அமைப்பு முழுவதுமாக சீரமைத்திருக்கிறோம். அமைப்பு ரீதியாக தற்போது பலம் சேர்க்கப்பட்டுள்ளது அப்படி இருக்கும்போது செல்வபெருந்தகையின் அறிக்கை தான் காங்கிரஸ் கட்சியின் நிலை. செல்வப் பெருந்தகை கோரி இருப்பது இப்படி அவதூறாக பேசியிருக்கும் மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தனது ட்விட்டரில் சொல்லி இருப்பதை நானும் தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகையின் வேண்டுகோளின் படி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களை அவமானப்படுத்துகிற செயலை செய்த நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சிக்காரர் ஒவ்வொருவரின் கோரிக்கையாக உள்ளது. எனக்கும் சகோதரி ஜோதிமணிக்கும் சீட்டு கிடைப்பது காங்கிரஸ் தலைமை முடிவெடுக்க வேண்டிய விஷயம் பிரச்சனை காங்கிரஸ் தொண்டர்கள் இல்லை. பூத்து வாடுகளில் நிர்வாகிகள் இல்லை என்பது வன்மம். அந்த வன்மத்தை கடுமையாக எதிர்க்கிறோம் இதை நிதானமாக கையாளுவோம் எங்களை பொறுத்த அளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சொன்ன எக்ஸ் பதிவில் நடவடிக்கை கேட்டிருக்கிறார். 
 
தேர்தல் அறிவித்து கூட்டணி பேசி தொகுதி பங்கீடுக்கு பிறகு பேசுவோம்
 
எங்களைப் பொறுத்தளவில் இந்தியா கூட்டணி என்பது பாராளுமன்ற கூட்டணிக்காக உருவாக்கப்பட்டது யார் என்ன பெயர் சொல்கிறார்களோ அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நாங்கள் பெயரை மாற்றவில்லை.  இளைஞர் காங்கிரஸ் சகோதரர்கள் போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள். அவர்களை பாராட்டுகிறேன். தன்மானம் உள்ள இளைஞர் காங்கிரஸ் தம்பிகளுக்கு எனது பாராட்டுக்கள். அதிகார மமதையில் உள்ள மாவட்டச் செயலாளருக்கு அப்படித்தான் தெரியும் கல்லணையில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து அனைவருக்கும் தெரியும். பாரியை நிறுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறார்கள் அதைப் பற்றி பேசவில்லை இது குறித்து நாங்கள் பேசத் தொடங்கினால் இன்று முழுவதும் தாங்காது. அரசாங்கத்தை மீறி என்ன நடக்கிறது என ஊருக்கெல்லாம் தெரியும் காங்கிரஸ் தொண்டர்களை அவமானப்படுத்திய மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்வபெருந்ததியின் கோரிக்கை அதை நிறைவேற்றுவதற்காக காத்திருக்கிறோம். அன்பு சகோதரர் விஷ்ணு பிரசாத் அதற்காக கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் இடமும் நகர்ப்புற அமைச்சரிடமும் கடிதம் எழுதி அதற்கான கோரிக்கை வைத்திருக்கிறார். நல்ல முடிவு எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதுவரை அதற்கான பெயர் வைத்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. என்னை பொறுத்த அளவில் விழுப்புரத்தில் நடந்ததில் கடலூர் எம்பி குரல் கொடுப்பதுதான் இந்திரா காந்தியின் பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார். அமைப்பு ரீதியாக பாராளுமன்றத் தொடர் முடிந்த பிறகு பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் போட போகிறோம். காங்கிரஸ் கட்சியின் பலத்தை காட்டுவோம் சும்மா சொல்கிறோம் என்று நினைக்கிறீர்களா. காங்கிரஸ் கட்சிக்காரன் வந்தே மாதரம் ஜே என்று சொல்வது மட்டும் கிடையாது. திருப்பி அடிக்க தெரியும். முதலில் தேர்தல் அறிவித்து கூட்டணி பேசி தொகுதி பங்கீடுக்கு பிறகு பேசுவோம் எனக் கூறினார்.

தலைப்பு செய்திகள்

ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
Embed widget