மேலும் அறிய
Advertisement
மதுரையில் 180 கோடி மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்திய நபர் கைது !
மதுரையில் பொதிகை எக்ஸ்பிரஸ்சில் 200 கோடி சர்வதேச சந்தை மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்திய நபர் கைது - போதைப்பொருட்கள் பறிமுதல்.
மதுரையில் சர்வதேச போதைக்கும்பலுடன் தொடர்புடையவர்கள் உள்ளனரா?போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணை
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக குஜராத் கடல் பகுதியில் ஈரானில் இருந்து கப்பல் மூலம் கடத்தவரப்பட்ட 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 180 கிலோவிற்கு மேலாக மெத்தப்பெட்டமைன் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக சர்வதேச கும்பலை சேர்ந்த 5 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இதில் தமிழகத்தில் இருந்தும் போதைப்பொருள் கடத்தலுக்கு தொடர்புடையவர்கள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து தமிழகத்தில் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் 5 பேரை டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்த தேடியபோது ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் தலைமறைவாகிய நிலையில் தேடிவருகின்றனர். மேலும் ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர்.
இதனிடையே மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தமிம் அன்சாரி என்பவரது வீட்டிலும் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையை சேர்ந்த அருண் மற்றும் அன்பு என்பவர்கள் போதைப்பொருளை வைத்து சென்றதாக கூறினார். அதனடிப்படையில் இருவரையும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் தேடிவருகின்றனர். இதனிடையே நாட்டையே உலுக்கிவரும் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தொடர்புகள் இருப்பதும், ஏராளமான போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தி் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதனிடையே மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் மத்திய வருவாய்பிரிவு புலனாய்வுத்துறை இயக்குனரக மதுரை யூனிட் அதிகாரிகளுக்கு ( DIRECTOR REVENUE INTELLGENGE ) ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்ட பிள்ளமன் பிரகாஷ் என்பவரை பின் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப்போது சென்னையில இருந்து - செங்கோட்டைக்கு புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு பேக்குடன் சென்னையை சேர்ந்த பிள்ளமன் பிரகாஷ் புறப்பட்டுள்ளார். இதனையடுத்து DRI அதிகாரிகளும் பிரகாஷை ரயிலில் பின் தொடர்ந்தனர். அப்போது மதுரை ரயில் நிலையத்தில் பிரகாஷ் இறங்க முற்பட்டபோது அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்து இரண்டு பேக்குகளையும் சோதனை செய்துள்ளனர். அதில் போதைபொருள் 15 பொட்டலங்களில் 15 கிலோ பவுடர் மற்றும் 15 கிலோ திரவ வடிவிலான என 30 கிலோ மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மத்திய வருவாய்பிரிவு புலனாய்வுத்துறை இயக்குனரக அதிகாரிகள் பிரகாஷை பிடித்து மதுரை ரயில்வே பாதுகாப்புபடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து காலை 5 மணி முதல் 12 மணிவரை என 7 மணி நேரம் விசாரணை நடத்திய பின்னர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அடுத்தகட்ட விசாரணைக்காக அழைத்துசென்றனர். பிள்ளமன் பிரகாஷிடம் நடத்திய விசாரணையில் சென்னை கண்ணதாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் இவருடன் தொடர்புகொண்ட ஒரு மர்ம நபர் ஒருவர் இதனை ரயிலில் மதுரை எடுத்துசெல்ல வேண்டும் பணம் தருவதாக கூறியதன் அடிப்படையில் எடுத்துவந்துள்ளதாகவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளளது. பிரகாஷிடம் கைப்பற்றிய 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு 200 கோடி வரை இருக்கலாம் என முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் இருக்கக்கூடிய போதை பொருட்களை ஒரே இடத்தில் வைக்காமல், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பிரித்து பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர். குஜராத்தில் கப்பல் வழியாக கடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் தமிழக கடலோர பகுதிகளில் இருந்து கடல் வழியாக போதை பொருள்களை எளிதில் கடத்திச் செல்ல திட்டமிடப்பட்டு தமிழகத்தில் சர்வதேச போதைப்பொருள் கும்பல் போதைப்பொருள்களை பதுக்கிவருகிறதா ? என்ற அடிப்படையிலும் மத்தியபோதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மதுரையில் அடுத்தடுத்து மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. இது போன்ற அடையாளம் தெரியாத நபர்கள் மூலம் மதுரையை மையமாக வைத்து மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தப்படுகிறதா என்ற அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
சேலம்
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion