மேலும் அறிய
உசிலம்பட்டி கல்லூரி விடுதியில் அதிர்ச்சி! ராக்கிங் கொடுமை: நிர்வாணப்படுத்தி தாக்கிய மாணவர்கள் மீது வழக்கு !
விடுதியில் சக மாணவனை நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் விடுதி
Source : whats app
உசிலம்பட்டி அருகே அரசு தொழில்நுட்ப கல்லூரி விடுதியில் சக மாணவனை நிர்வாணப்படுத்தி மாணவர்கள் ராக்கிங் செய்து தாக்கி வீடியோ வைரலான சூழலில் - சக மாணவர்கள் மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை, விடுதி காப்பாளரையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் இயங்கி வருகிறது. அரசு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி, இந்த கல்லூரியின் மாணவர்கள் விடுதியான அரசு கள்ளர் மாணவர் விடுதியில் மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 70 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி விடுதியில் தங்கி இருந்த மாணவனை சக மாணவர்கள் நிர்வாணப்படுத்தி ராக்கிங் செய்து தாக்கிய வீடியோ வைரலாகி பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று மாணவர்கள் மீது செக்காணூரணி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவனை நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மேலும் கவனக்குறைவாக இருந்ததாக விடுதி காப்பாளர் பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து கள்ளர் சீரமைப்புத்துறை சார்பிலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. விடுதியில் சக மாணவனை நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement




















