மேலும் அறிய

Tungsten Mine: ”நான் 2023 அக்டோபரில் சொன்னேன்” டங்ஸ்டன் விவாகரத்தில் அமைச்சர் துரைமுருகன் சொன்ன பாயிண்ட்.!

Madurain Tungsten Mine மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக கருத்துகள் தெரிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.

மத்திய அரசு:

நேற்றைய தினம் மத்திய அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதாவது “ 2024 ஆம் ஆண்டு டங்ஸ்டன் ஏலம் முடிவு அறிவிக்கும் வரை தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து , எந்த தகவலும் வரவில்லை என தெரிவித்திருந்தது. மேலும், இபிஎஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தமிழ்நாடு அரசை குற்றம் சாட்டியிருந்தனர்.

தமிழ்நாடு அரசு

இந்நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விளக்கம் அளித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது , “கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டங்ஸ்டன் ஏலத்தால் சட்டம் ஒழுங்கு கெடும் என கடிதம் அனுப்பப்பட்டது. சுரங்க குத்தைகையை, மாநில அரசு கையாள வேண்டும் கடிதத்தில் குறிப்பிட்டேன். மாநில அரசின் எதிர்ப்பு இருந்தபோதும், மத்திய அரசு ஏல நடக்கையில் இறங்கியது. முதலமைச்சர் ஸ்டாலின் தலையீட்டைத் தொடர்ந்து மறு ஆய்வுக்கு மத்திய அரசு பரிந்துரைத்தது. ஹிந்துஸ்தான்  நிறுவனத்திற்கான உரிமையை ரத்து செய்து, டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

Tungsten Mine: ”நான் 2023 அக்டோபரில் சொன்னேன்” டங்ஸ்டன் விவாகரத்தில் அமைச்சர் துரைமுருகன் சொன்ன பாயிண்ட்.!

மத்திய அரசு செய்ய பரிந்துரை:

நேற்றைய தினம் , டங்ஸ்டன் சுரங்கம் அமையும் இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்துது. பல்லுயிர் பாரம்பரிய தலம் உள்ள இடத்தில் சுரங்கம் அமைய இருப்பதாக கருத்துருக்கள் வந்ததாகவும், இந்நிலையில் அப்பகுதிகளை தவிர்த்துவிட்டு, இதர பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.  மேலும், 2024 ஆம் ஆண்டு ஏலம் முடிவு அறிவிக்கும் வரை தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து , எந்த தகவலும் வரவில்லை என மத்திய அரசு தெரிவித்தது. 

அரிட்டாபட்டி:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தமிழ்நாட்டின் முதல் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிர் தளமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலையை வெட்டி டங்ஸ்டன் எடுக்க வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால் மேலூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு பாரம்பரிய சின்னங்கள், இயற்கை வளங்கள், பல்லுயிர் தளங்கள் மற்றும் விவசாயம் பெருமளவு பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் என எதிர்ப்புகள் எழ ஆரம்பித்தன. 

போராட்டம்:

இதனை கண்டித்து, டங்ஸ்டன் எடுக்க மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். முல்லைப் பெரியாறு ஊருக்கு போக பாசன விவசாய பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், தமிழர் பாரம்பரியத்தை போற்றும் விதமாக, பல்வேறு வரலாற்றுச் சின்னங்கள் உள்ள மதுரை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட தமிழ் பண்பாட்டு தொல்லியல் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான, வெள்ளலூர், கோட்டநத்தம்பட்டி, கிடாரிப்பட்டி அ.வல்லாளப்பட்டி நரசிங்கம்பட்டி, அரிட்டாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். 

மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவியிலும் , டங்ஸ்டர் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றம் செய்யப்பட்டது. 

இதையடுத்து, நேற்றைய தினம் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தொடர்பான இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரைத்தது.

இந்நிலையில், ஏலம் தொடர்பாக , தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற கருத்துக்கு, எதிர்ப்பு தெரிவித்தோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் , மத்திய அரசும் மாநில அரசும் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொள்வது, மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

K.N.NEHRU : ‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
சென்னை வொண்டர்லா: ஒரு மாதத்தில் மாறியதா அனுபவம்? | ABP Field Report
சென்னை வொண்டர்லா: ஒரு மாதத்தில் மாறியதா அனுபவம்? | ABP Field Report
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
ABP Premium

வீடியோ

20 ஆண்டுகள் 5 தேர்தல்தோல்வியே சந்திக்காத இளைஞன்மோடியின் புதிய Boss
”ஓசூருக்கு எதுக்கு AIRPORT?”தட்டித்தூக்கிய நாயுடு பின்னணியில் மோடி?
OVERTAKE செய்த ஓட்டுநர் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து மதுரையில் பரபரப்பு
ஐயப்பன் கோயில் நடை அடைப்பு மகர விளக்கு சீசன் நிறைவு அடுத்த தரிசனம் எப்போது? | Sabarimalai | Sabarimala Devotees | Temple | Festival | Tamil News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
K.N.NEHRU : ‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
சென்னை வொண்டர்லா: ஒரு மாதத்தில் மாறியதா அனுபவம்? | ABP Field Report
சென்னை வொண்டர்லா: ஒரு மாதத்தில் மாறியதா அனுபவம்? | ABP Field Report
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
Rajinikanth: ரஜினிதான் புருஷன் ஆக வேண்டியதா? ஹைப்பை ஏற்றிய சுந்தர் சி பட ட்ரெயிலர்!
Rajinikanth: ரஜினிதான் புருஷன் ஆக வேண்டியதா? ஹைப்பை ஏற்றிய சுந்தர் சி பட ட்ரெயிலர்!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
தேனியில் மின் தடை: நாளை முதல் 24ஆம் தேதி வரை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
தேனியில் மின் தடை: நாளை முதல் 24ஆம் தேதி வரை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
Embed widget