மேலும் அறிய

துரோகிகள் அதிமுக கட்சியை அழிக்க, ஒழிக்க நினைக்கிறார்கள்.. அது எடுபடாது - திண்டுக்கல் சீனிவாசன்

எம்.ஜிஆர் காலில் விழுந்து முதல்வர் ஆனவர் கருணாநிதி, அதை இன்றைய முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும்.. போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

இன்றும் நமது துரோகிகள் கட்சியை அழிக்க, ஒழிக்க நினைக்கிறார்கள். அது எடுபடாது. எம்ஜிஆரின் ஆன்மா, அம்மாவின் ஆன்மா எடப்பாடியாரை ஆசிர்வதித்து கொண்டிருக்கிறது.
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணி பேருந்து நிலையத்தில் கள்ளர் பள்ளிகள் விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயக்குமார் முன்னிலையில் உண்ணாவிரத போராட்டம் நேற்று காலை 9 மணி முதல் மாலை 6:30 வரை நடைபெற்றது.
 
இறுதியாக பார்வர்ட் ப்ளாக் கட்சியினர் அளித்த குளிர்பானத்தை அருந்தி உண்ணாவிரத போராட்டம் நிறைவுற்றது.,
 
செல்லூர் ராஜூ
 
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ”ஏன் கைரேகை சட்ட போராட்டம் குறித்த வரலாற்றை சொல்கிறேன் என்றால், வரலாறு தெரியாத பொம்மை முதல்வர் ஆள்வதால்தான். இன்று கள்ளர் பள்ளிக்காக போராடும் நிலைக்கு வந்துள்ளோம். இந்த முக்குலத்தோர் சமுதாய மக்களை மேம்படுத்த வேண்டும் என 1920 ல் கொண்டு வந்தது தான் கள்ளர் பள்ளிகள், மார்க்கையன்கோட்டையில் தான் முதல் பள்ளி கொண்டு வரப்பட்டது, தொடர்ந்து தென்மாவட்டங்களில் விரிவுபடுத்தப்பட்டது., பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை என சொல்கிறார். ஆனால் (ஜி.ஓ 40) மூலமாக எடுப்பதற்கு மறைமுகமாக முயற்சி செய்கிறார்கள்” என பேசினார்.
 
நத்தம் விஸ்வநாதன்
 
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ”மக்கள் நல திட்டங்களை எல்லாம் ஆட்டை கடித்து மாட்டை கடித்ததை போல, மக்கள் அனுபவித்து வந்த இந்த திட்டத்தை, அறிவிக்காத போர் தொடுத்ததை போல முக்குலத்தோரை பழிவாங்குவதை போல இன்று செயல்பட்டு வருகிறது திமுக. திமுக ஆட்சிக்கு வந்தால், தன்னை எதிர்ப்பவர்களை பழிவாங்குவதும், ஒழிப்பதும் அவர்களின் நோக்கம்., இன்று மக்கள் மீது போர் தொடுப்பது போல பழிவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
 
எல்லா சமூதாயத்தினரையும் வஞ்சிக்கும் ஆட்சிதான் திமுக ஆட்சி. அதில் கூடுதலாக முக்குலத்தோர் சமுதாயத்தினரை வஞ்சிக்கின்றனர். இதற்கெல்லாம் தீர்வு ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும், 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி உருவாக்கிட வேண்டும்” என பேசினார்.,
 
திண்டுக்கல் சீனிவாசன்
 
மேலும் இறுதியாக பேசிய முன்னாள் அமைச்சரும் அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன், ”எடப்பாடி பழனிச்சாமி தொட்டதெல்லாம் துவங்கும், அவர் கை பட்டதெல்லாம் விளங்கும் என்பதற்கு இந்த போராட்டம் ஒரு எடுத்துக்காட்டு. என்றைக்கும் எம்ஜிஆர் வெற்றி பெற்றாரோ, அவரது வேட்பாளர் முக்குலத்தோர் சமுதாய வேட்பாளர் திண்டுக்கல்லில் முதன்முதலாக வெற்றி பெற்றாரோ அன்றே வஞ்சணை வைத்திருப்பார் போல கருணாநிதி.
 
அதேபோல அவரது மகன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்குலத்தோர் சமுதாயம் மீது வஞ்சனை வைத்துள்ளார். அவர்களை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக யார் யாரோ போராட்டம் நடத்தினாலும், எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த அறிக்கைக்கு மூன்றாவது நாளில் மீண்டும் அறிக்கை வெளியிட்டதே நமக்கு வெற்றிதான்.
 
அன்று முதன்முதலாக எம்ஜிஆர் காலில் விழுந்து முதல்வர் ஆனவர் கருணாநிதி, மக்களால் முதல்வர் ஆனவர் அல்ல, அதை இன்றைய முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும்., மீண்டும் எம்ஜிஆர் இருக்கும் வரை கருணாநிதியால் முதல்வராக வர முடியவில்லை. இன்றும் நமது துரோகிகள் கட்சியை அழிக்க, ஒழிக்க நினைக்கிறார்கள் எது எடுபடாது, எம்ஜிஆரின் ஆன்மா, அம்மாவின் ஆன்மா எடப்பாடியாரை ஆசிர்வதித்து கொண்டிருக்கிறது.
 
கள்ளர் பள்ளிகளை மாற்றவில்லை என்பது வேத வாக்கா, நிறம் மாறுகிறவர்கள், நீங்கள் வார்த்தைக்கு உத்திரவாதம் தராதவர்கள், 40 அரசானையை ரத்து செய்து வேண்டும்., 40 அரசானை ரத்தாகும் வரை போராட்டம் தொடரும் என எடப்பாடியார் அறிக்கையாகவே வெளியிட்டு விட்டார் யாரைக் கண்டும் பயப்பட வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு கிடையாது” என பேசினார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதியேற்றுள்ளோம்: பிரதமர் மோடி
இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதியேற்றுள்ளோம்: பிரதமர் மோடி
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா? 
சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா? 
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் தனியார் நிறுவனங்கள்.. செய்ய வேண்டியது என்ன?
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் தனியார் நிறுவனங்கள்.. செய்ய வேண்டியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Telangana BRS | விரட்டியடித்த கிராம மக்கள் தெறித்து ஓடிய அதிகாரிகள்கற்களை வீசி தாக்குதல்!OPS mobile missing : ஓபிஎஸ்-க்கு இந்த நிலையா? மணிக்கணக்கில் WAITING! AIRPORT-ல் நடந்தது என்ன?S Ve Sekar VS Annamalai : ”திட்டம் தீட்டிய அண்ணாமலை!கண்டுகொள்ளாத மோடி”ஓரங்கட்டப்படும் சீனியர்கள்?Vistara Airline : கடைசியாய் ஒருமுறை..விண்ணில் பறக்கும் விஸ்தாரா!பிரியா விடை கொடுத்த பயணிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதியேற்றுள்ளோம்: பிரதமர் மோடி
இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதியேற்றுள்ளோம்: பிரதமர் மோடி
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா? 
சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா? 
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் தனியார் நிறுவனங்கள்.. செய்ய வேண்டியது என்ன?
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் தனியார் நிறுவனங்கள்.. செய்ய வேண்டியது என்ன?
Video: தள்ளி போ.! தொண்டரை காலால் உதைத்த பாஜக தலைவர்.! அதிர்ச்சியளிக்கும் வீடியோ.! எங்கு? என்ன நடந்தது?
Video: தள்ளி போ.! தொண்டரை காலால் உதைத்த பாஜக தலைவர்.! அதிர்ச்சியளிக்கும் வீடியோ.! எங்கு? என்ன நடந்தது?
ஸ்டாலின் இதை முதல்ல செய்யுங்க... ஜி.கே. வாசனிடம் இருந்து வந்த முக்கிய அறிக்கை என்ன ?
ஸ்டாலின் இதை முதல்ல செய்யுங்க... ஜி.கே. வாசனிடம் இருந்து வந்த முக்கிய அறிக்கை என்ன ?
பயப்படுறியா குமாரு?தவெகவின் இலவச விருந்தகம் அகற்றம்; மதுரையில் வெடித்த சர்ச்சை!
பயப்படுறியா குமாரு?தவெகவின் இலவச விருந்தகம் அகற்றம்; மதுரையில் வெடித்த சர்ச்சை!
விஜய்க்காக வாயை விட்ட கார்த்தி சிதம்பரம்; அதிரடி முடிவை எடுத்த சீமான் - கண்டிஷனை மட்டும் பாருங்க!
விஜய்க்காக வாயை விட்ட கார்த்தி சிதம்பரம்; அதிரடி முடிவை எடுத்த சீமான் - கண்டிஷனை மட்டும் பாருங்க!
Embed widget