மேலும் அறிய
மதுரை மக்களே.. கோரிப்பாளையம் வழியா வருவீங்களா.. இத கவனமா படிச்சுட்டு வாங்க !
பனகல் சாலை வழியாக வரக்கூடிய வாகனங்கள், வழக்கம்போல அரசு மருத்துவமனையின் இடதுபுறம் வழியாக செல்லலாம்.

கோரிப்பாளையம் பகுதி
மதுரை கோரிப்பாளையம் மையப்பகுதியை சுற்றி பல்வேறு போக்குவரத்து மாற்றம் - இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை நடைமுறைப்படுத்தப் படுகிறது.
மதுரையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்
மதுரையில் மாநகரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மாட்டுத்தாவணி, நெல்பேட்டை, பழங்காநத்தம், காளவசல், மூன்றுமாவடி, ஐயர்பங்களா, பாண்டிக்கோயில் பகுதி, பால்பண்ணை, தெப்பக்குளம், கீழவெளி வீதி, சிம்மக்கல் என பல இடங்களில் வாகனங்கள் அதிகரிப்பால் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல இடங்களில் பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகரின் மையப்பகுதியாக பார்க்கப்படும் கோரிப்பாளையம் சந்திப்பில் பாலம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இது தொடர்பாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இரவு 11:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை ஒரு நாள் மட்டும்
மதுரை கோரிப்பாளையம் சிக்னலில் மேம்பாலம் அமைக்கும் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக இன்று (ஜூன் 27) இரவு கான்கிரீட் கட்டுமானப் பணி நடக்க உள்ளது. எனவே இரவு 11:00 மணி முதல் நாளை (ஜூன் 28) அதிகாலை 4:00 மணி வரை ஒருநாள் இரவு மட்டும் ஏ.வி.பாலத்தின் கீழ் செல்லக் கூடிய வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இன்று (ஜூன் 27) இரவு மட்டும் ரோடு அதன்படி, அழகர் கோவில் ரோடு, பாலம் ஸ்டேஷன் பகுதியில் இருந்து கோரிப்பாளையம், ஏ.வி.பாலம் வழியாக நகருக்குள் செல்லக் கூடிய வாகனங்கள் கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் இறக்கம், மூங்கில் கடை, வைகை வடகரை வழியாக எந்தப் பகுதிக்கும் செல்லலாம்.
காமராஜர் சாலையில் நகருக்குள் செல்லலாம்.
மேலுார் ரோடு, மாட்டுத்தாவணி பகுதியில் இருந்து கோரிப்பாளையம், ஏ.வி.,பாலம் வழியாக நகருக்குள் செல்லக் கூடிய லாரி, சரக்கு லாரி போன்ற கனரக வாகனங்கள், புறநகர் பஸ்கள் கே.கே. நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு, அரவிந்த் கண் மருத்துவமனை சிக்னல் வழியாக குருவிக்காரன் சாலை பாலம் சென்று, காமராஜர் சாலையில் நகருக்குள் செல்லலாம்.
பனகல் சாலையில் பிரச்னை இல்லை
பனகல் சாலை வழியாக வரக்கூடிய வாகனங்கள், வழக்கம்போல அரசு மருத்துவமனையின் இடதுபுறம் மார்ச்சுவரி ரோடு திரும்பி வைத்தியநாதஐயர் சந்து வழியாக வைகை வடகரை சென்று நகருக்குள் எந்தப்பகுதிக்கும் செல்லலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















