மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி வரி மோசடி! திமுக தலைவர்கள் விசாரணை வளையத்தில்? பரபரப்பு கைதுகள்!
விசாரணை வளையத்தில் திமுக மண்டல தலைவர்கள் ? தொடரும் சங்கிலி தொடர் விசாரணைகளால் அதிகாரிகள் தொடங்கி ஆளும் கட்சியினர் வரை கைதாக வாய்ப்பு.

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி மோசடியில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 லட்சம் ரூபாய் வரிக்கு 1 லட்சம் ரூபாய் வரி வசூல் என்ற அளவிற்கு 200 கோடி ரூபாய் வரை மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்தி மோசடி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். தி.மு.க மண்டலத்தலைவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தனியாருக்கு சொந்தமான கட்டிடங்கள் உள்ளன. இதற்கான வரி வசூல் பணிகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு கட்டிடங்களுக்கும் அதன் பகுதிகளுக்கு ஏற்ப வரிவிதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டு நீதிமன்றத்தின் மூலமாகவோ அல்லது மாநகராட்சி கூட்டத்தில் மேற்கொள்ளக்கூடிய தீர்மானத்தின் மூலமாக முடிவெடுக்கப்படும். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக மண்டலம் 2, 3, 4, 5 ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு வரிவிதிப்பு குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது, கடந்த ஆண்டு ஆணையாளரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. முறைகேட்டில் அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் சில மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து முறைகேடுகளை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதற்காக வரிவிதிப்புக்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டதும் தெரிவித்துள்ளது. 2,3,4 ஆகிய மண்டலங்களில் அதிகளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளது, தெரியவந்துள்ளது. முன்னாள் ஆணையாளர் புகார் இதையடுத்து ஏற்கனவே முந்தைய ஆணையாளரால் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் துறையினர் வரி குறைப்பு தொடர்பான அழிக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து தீவிர விசாரணையை நடத்தியதில் முறைகேடுகள் கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த 2 நாட்களாக மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர் முறைகேடுகள் நடைபெற்ற மண்டல அலுவலகங்களில் தீவிர விசாரணை நடத்தினர். 5 நபர்கள் கைதான பின்னர் மதுரை மாநகராட்சி 3ஆவது மண்டல தலைவரின் நேர்முக உதவியாளரான தனசேகரன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, உதவி ஆணையாளரின் உதவியாளர் கார்த்திகேயன், இடைத்தரர்களான உசேன், ராஜேஷ் ஆகிய 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனிடையே கைதான 3 பேரையும் மாநகராட்சி பணியில் இருந்து பணியிட நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முறைகேடு வழக்கில் கைதான நபர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மண்டல தலைவர்கள் வரிவிதிப்பு குழுவினர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களின் வற்புறுத்த காரணமாகவே முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். விசாரணை வளையில் சிக்கினர் அந்த அடிப்படையில் மதுரை மத்திய குற்ற பிரிவு காவல்துறையினர் சில மண்டல தலைவர்கள், சில மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் புதிய வரி விதிப்பு ,குடிநீர் குழாய் பாதாள சாக்கடை இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் அனைத்தும் மண்டல அலுவலகத்திற்கு வரும்போது அங்கு பணிபுரியும் அங்கு தற்காலிக பணியாளர்கள், இடைத்தரகர்கள் மனுதாரர்களிடம் பேரம் பேசி பணம் பெறுகின்றனர் பணம் கொடுக்காத அவர்களின் மனுக்கள் கிடப்பில் போடப்படுகிறது. ரூ.8 லட்சம் வரிவிதிப்பு இருக்க கூடிய கட்டிடங்களுக்கு ரூ.1 லட்சம் வரி செலுத்தினால் போதும். என்ற, அளவிற்கு வரிக்குறைப்பு செய்து மோசடி செய்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இது போன்ற ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு முறைகேடு நடந்துள்ளதால் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கலாம் எனவும் விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்துள்ளது. வரிக்குறைப்பு முறைகேடு விவகாரத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர் தொடர்ந்து விசாரணையை தீவிர படுத்தியுள்ள நிலையில் மேலும் பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.





















