மேலும் அறிய
செங்கோட்டையன் ராஜினாமா பின்னால் பாஜக-ஆர்எஸ்எஸ் சதி? தொல். திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு!
ஆளுநர் திரும்ப திரும்ப தமிழகத்திற்கு எதிராகவும் திராவிட அரசியலுக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். - திருமாவளவன் குற்றச்சாட்டு.

தொல்.திருமாவளவன்
Source : whatsapp
செங்கோட்டையன் உண்மையை பதவி ராஜினாமா முடிவுக்கு பாஜக - ஆர்.எஸ்.எஸ் பின்னணி உள்ளதா? - மதுரை விமான நிலையத்தில் தொல் திருமாவளவன் பேட்டி
தொல்.திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு
சென்னையில் இருந்து மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது நவம்பர் 26 இந்திய அரசமைப்புச் சட்ட நாள் இந்த நாளில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை நினைவில் கொண்டு அவருக்கு நன்றி செலுத்துகிறோம். அல்லும் பகலும் உழைத்து அவர் உருவாக்கிய சட்டம் சுரண்டல், இல்லாத சமூகத்தை கட்டமைக்க வேண்டும், என்பது அவருடைய கனவாகும். இது தொடர்பாக மதுரையில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ளேன்.
கோடிக்கணக்கான மக்களின் குடியுரிமையை பறிக்கும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் எஸ்.ஐ.ஆர் என்ற நடைமுறை தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடைபெறுகிறது. தேர்தல் ஆணையம் அதை தீவிர படுத்தி வருகிறது. கடந்த காலங்களிலிருந்து எஸ்.ஐ.ஆர் பணி நடைபெற்று வருகிறது. என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தாலும் அவைகள் பேசு பொருளாக இல்லை. ஆனால் தற்போது தமிழகத்தில் நடைபெறும் எஸ் ஐ ஆர் நடைமுறை தான் பேசு பொருளாகி வருகிறது. தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி பாஜக அரசு ஒவ்வொரு குடிமகனின் குடியுரிமையையும் சோதனைக்கு உள்ளாகி இருக்கிறது. ஆகவே இது கோடிக்கணக்கான மக்களின் குடியுரிமையை பறிக்கும் என்றார்.
செங்கோட்டையன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு
செங்கோட்டையன் அதிமுகவில் மூத்ததலைவர் அவருக்கு நெடிய அனுபவம் உள்ளது. அவரை அதிமுகவிலிருந்து வெளியேற்றியது எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதிமுகவிற்கும் பின்னடைவாகத்தான் இருக்கும்.
தனிப்பட்ட முறையில் தன்னிச்சையாக செங்கோட்டையன் இந்த முடிவை எடுத்திருந்தால், அதில் எந்த கருத்தையும் சொல்வதற்கு இல்லை. ஆனால் இதன் பின்னணியில் பாஜக, ஆர் எஸ் எஸ் ஆகிய அமைப்புகளின் கைகளும் நீண்டிருக்குமா? என்ற கேள்வி வருகிறது. ஏற்கனவே அவர் பாஜகவினர் தான் என்னை டெல்லிக்கு அழைத்தாளர்கள் என ஒப்புதல் வாக்குமூலம் கூறியிருக்கிறார். அதிமுகவை பலவீனப்படுத்துவதை ஒரு செயல் திட்டமாக பாஜக செயல்படுத்தி வருகிறது. அது அதிமுகவிற்கும் நல்லதல்ல, தமிழ்நாட்டுக்கும் நல்லதல்ல அதிமுக அதைப்பற்றி சிந்தித்து ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து தமிழ் பற்று குறித்து ஆளுநர் எங்களுக்கு அறிவுரை கூற தேவை இல்லை என முதல்வர் பேசியது குறித்த கேள்விக்கு
ஆளுநர் திரும்ப திரும்ப தமிழகத்திற்கு எதிராகவும் திராவிட அரசியலுக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். முரண்பாடுகளையும் தமிழக மக்களுக்கு இடையில் உள்ள பாகுபாடுகளையும் வைத்து அரசியல் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அவரை திரும்ப பெற வேண்டும் என மத்திய ஒன்றிய அரசிடம் பலமுறை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இந்திய ஆட்சியாளர்கள் அவரை வைத்து தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவது கவலை அளிக்கிறது. ஆளுநரின் கருத்தை முதல்வர் கண்டித்திருப்பது வரவேற்கத்தக்கது, அதை வழிமொழிகிறோம். தியாகி பொன்னான் நினைவு மணிமண்டபத்தை திறந்து வைத்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் பேசினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















