த.வெ.க கட்சியில் சாதிய பாகுபாடு ? தற்கொலை முயற்சி செய்த பெண் நிர்வாகி !! தொண்டர்கள் அதிர்ச்சி
சென்னையில் தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிக்கு சாதி வேறுபாடு துன்புறுத்தல். மனம் உடைந்த பெண் நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை முயற்சி

ஆலோசனை கூட்டம் - நிர்வாகிகள் பங்கேற்பு
சென்னை மணலி பகுதியில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் மணலி பகுதியில் தமிழக வெற்றி கழகத்தில் மகளிர் அணியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அந்த பகுதியில் வடசென்னை தெற்கு மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் மணலி பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் அந்த கட்சியில் சார்பாக செயல்பட்டு வரும் விலையில்லா விருந்தகத்தில் சிறிய ஆலோசனை கூட்டம் நடத்தி வந்திருக்கிறார். அதில் , அந்த பெண் பங்கேற்ற நிலையில் அந்தப் பெண்ணின் ஆதரவாளரான மாவட்ட மகளிர் அணி நிர்வாகியின் சாதி குறித்தும் பொருளாதாரத்தை குறிக்கும் விமர்சித்து பேசி உள்ளார்.
தூக்கிட்டு தற்கொலை முயற்சி
இதனால் , மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் சம்பவ இடத்திலிருந்து வீட்டிற்கு அழுது கொண்டு சென்றிருக்கிறார். வீட்டுக்கு சென்ற அவர் , தனது தற்கொலை முயற்சிக்கு ராஜேஷ் என்பவர் தான் காரணம் என ராஜேஷ்க்கும் மகளிர் அணி நிர்வாகிகளுக்கும் வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு வீட்டில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
ஆபத்தான நிலையில் பெண் - ஆம்புலன்ஸில் ஏற்றி சென்ற நிர்வாகிகள்
இந்த குறுஞ் செய்தியை கண்ட மகளிர் அணி நிர்வாகிகள் உடனடியாக அவரது கணவருக்கு தொடர்பு கொண்டு விவரத்தை கூறி விட்டு அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்று பார்த்த போது ஆபத்தான நிலையில் அந்த பெண் இருந்ததைக் கண்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கின்றனர் அங்கு அந்த பெண்ணிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மணலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த இளம் பெண் மருத்துவமனையில் பேசிய வீடியோ வெளியாகி இருக்கிறது.
அதில் இளம்பெண் கூறுகையில் ;
தன்னுடைய மகளிர் அணி மாவட்ட நிர்வாகி , மற்றொரு பெண் நிர்வாகியுடன் பேசக் கூடாது என்றும் , அவர் வசதியானவர் அவர் வேறு தான் சாதியை சேர்ந்தவர் என ராஜேஷ் பேசியதாகவும் , அதனை அந்த பெண்ணிடம் தான் கூறியதாகவும் நினைத்துக் கொண்டு தன்னை தினந் தோறும் தொந்தரவு செய்ததாகவும் இந்த விஷயம் தெரிந்தால் உன்னை ஏதாவது செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் , இதனால் மனமுடைந்ததால் தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அந்த பின் வீடியோவில் பேசியது தற்போது சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.





















