மதுரை சுங்குடி சேலைகளுக்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு - சிறைக்கு வெளியே விற்பனை அமோகம்
மதுரை மத்தியசிறை அங்காடியில் சுங்குடி சேலை விற்பனையை நேரில் பார்வையிட்ட டிஐஜி பழனி பெண்கள் அமைப்பினரிடம் சுங்குடி சேலையை விற்பனையை வழங்கி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மதுரையின் பிரபல தயாரிப்பான சுங்கடி சேலைகளை மீண்டும் "ஒரு நிலையம் ஒரு பொருள்" திட்டத்தின்கீழ் மதுரை ரயில் நிலையத்தில் விற்க ரயில்வே வாரியம் அனுமதி அளிக்கப்பட்டு . இதற்காக தகுதியுள்ள தயாரிப்பாளர்களிடமிருந்து மதுரை ரயில்வே கோட்ட வர்த்தக பிரிவு விருப்பமனு கோரி தற்போது சேலை விற்பனை தொடர்ந்து ரயில் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதுரை மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளால் உருவாக்கப்படும் சுங்குடி சேலை விற்பனையானது விறுவிறுப்படைந்துள்ளது.
மதுரை மத்திய சிறை, சிறைவாசிகளால் உருவாக்கப்பட்ட மதுரை சுங்குடிச் சேலைகளுக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் சுங்கடிச் சேலை விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது. மதுரையின் பிரபல சுங்கடிச் சேலை விற்பனை ஏற்கனவே ரயில் நிலையத்தில் உள்ளது குறிப்பிடதக்கது.@abpnadu pic.twitter.com/GZg1Wk30YP
— arunchinna (@arunreporter92) March 10, 2023
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்