மேலும் அறிய
Madurai ; சிலம்பாட்டத்தில் தேசிய கனவு கண்ட மாணவி: காயம் தந்த வலியால் தற்கொலை.. கண்ணீரில் குடும்பம் !
”தேசிய அளவில் சாதித்து பதக்கங்களோடு செய்தியில் வர வேண்டுமென நினைத்தாலே, இப்படி சிறிய காயத்திற்காக உயிரிழந்து செய்தியில் வரும் நிலைக்கு வந்துவிட்டாயே” - என கண்ணீர் விட்டு அழுத சகோதரி.
கோப்புப்படம்
சிலம்பட்டாத்தில் மாநில அளவில் பதக்கங்களை வென்ற பள்ளி மாணவி - கையில் ஏற்பட்ட சிறிய காயத்தால் சிலம்பம் சுற்ற முடியாத நிலை ஏற்பட்டதால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை.
சிலம்பம் மாணவி
மதுரை மாநகர் சொக்கநாதபுரம் விநாயகர் தெரு பகுதியை சேர்ந்த ராமர்- கற்பகம் தம்பதியினர். இரு மகள்களுடன் வாடகை வீட்டில் வசித்துவந்துள்ளனர். கூலித் தொழிலாளியான ராமரின் இளைய மகளான தான்யலெட்சுமி கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி தான்யலெட்சுமி சிறு வயதில் இருந்தே சிலம்பம் விளையாடுவதில் அதிக ஆர்வத்துடன் இருந்துவந்துள்ளார். 8ஆம் வகுப்பு படித்துவந்த போதே சிலம்பம் பழகி மாவட்ட அளவில் பரிசு வாங்கியுள்ளார். பின்னர் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு பதக்கங்களை வென்ற மாணவி தான்யலெட்சுமிக்கு தொடர்ந்து தேசிய அளவில் சிலம்பாட்ட போட்டியில் சாதிக்க வேண்டும், என்ற எண்ணத்தில் எப்போதுமே சிலம்பாட்டத்தில் பல்வேறு ஆசனங்களை கற்றறித்து சிறப்பாக விளையாடிவந்துள்ளார்.
கை ரொம்ப வலிக்கிறது எனக்கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்
இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பாக தான்யலெட்சுமிக்கு வலது கையில் மணிக்கட்டு அருகே திடிரென வலி ஏற்பட்டுள்ளது. பின்னர் மருத்துவரிடம் ஆலோசித்தபோது ஜவ்வு விலகியுள்ளது என கூறியுள்ளனர். பின்னர் மாணவியின் பெற்றோர் ஆனையூர் பகுதிக்கு சென்று அங்கு மாவுக்கட்டு போட்டுள்ளனர். இதையடுத்து சிறிது நாட்களில் இரண்டு கைகளிலும் வலி ஏற்பட்டு சிலம்பம் சுற்ற முடியாமலும், பேனா பிடித்து தேர்வு எழுத முடியாமலும் தவித்துவந்துள்ளார். இதனிடையே மதுரை திருமங்கலம் பகுதியில் நடைபெற்ற மாவட்ட விழா என போட்டியில் கலந்து கொண்டு மூன்றாவது பரிசை பெற்றுள்ளார். அப்போது தன்னால் தனது ஸ்டைலில் சிலம்பம் ஆட முடியவில்லை. கை ரொம்ப வலிக்கிறது எனக்கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதனால் தான் முதல் பரிசு பெற்றிருக்க வேண்டும் கையில் வலி உள்ளதால் விளையாட முடியவில்லை எனக்கூறி தனது மூன்றாவது பரிசை கூட பெறவில்லை.
காயம் சரியாகிவிடும்
பின்னர் கடந்த ஒரு மாதமாக தான்யலெட்சுமி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் கடந்த ஒரு வாரமாக ஹோமியோபதி மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். இரண்டு நாட்களாக கை வலி அதிகமாக இருக்கிறது, என்றும் தன்னால் சிலம்பம் சுற்றமுடியவில்லையே என்று மன வருத்தத்தில் இருந்துவந்துள்ளார். நான் பேசிய அளவில் சிலம்பாட்ட போட்டியில் சாதித்து பதக்கங்களை வெல்ல வேண்டும் எனவும், அதன் மூலமாக நன்றாக படிக்க வேண்டும் எனவும் தனது பெற்றோரிடம் சகோதரியிடம் கூறிக் கொண்டே இருந்துள்ளார். அப்போது பெற்றோரும் அவரது சகோதரியும் தொடர்ந்து மாணவிக்கு ஆறுதல் தெரிவித்து, நிச்சயமாக காயம் சரியான பின்பாக பள்ளிக்கு சென்று விடலாம் போட்டியிலும் கலந்து கொள்ளலாம் என கூறியுள்ளனர்.
மாணாவி இறப்பு
இந்நிலையில் நேற்று பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்ற நிலையில் சகோதரியும் வெளியில் சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மாணவி தான்யலட்சுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டிற்கு திரும்பிய பெற்றோர் கதவை தட்டி பார்த்தபோது தானிய லட்சுமி தற்கொலை செய்தது தெரியவந்து பதற்றமடைந்தனர். இதனையடுத்து தல்லாகுளம் காவல்துறையினருக்கு அளித்த தகவலை எடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். மதுரையில் தேசிய அளவில் சிலம்பாட்ட போட்டியில் கலந்து பல்வேறு பதக்கங்களையும் பரிசுகளையும் பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவி கையில் ஏற்பட்ட சிறிய காயத்தால் தன்னால் சிலம்பாட்ட போட்டியிலும் பங்கேற்க முடியவில்லை, தேர்வும் எழுத முடியவில்லை எனக்கூறி மன உளைச்சலில் இருந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவருடன் பயிலும் மாணவிகள் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய அவரது சகோதரி சுபலெட்சுமி...,”தேசிய அளவில் சாதித்து பதக்கங்களோடு செய்தியில் வர வேண்டுமென நினைத்தவர், இப்படி சிறிய காயத்திற்காக உயிர் இழந்து செய்தியில் வரும் நிலைக்கு வந்துவிட்டாயே” - என கண்ணீர் விட்டு அழுதார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
Advertisement
Advertisement






















