மேலும் அறிய
அடுத்த கட்சிக் கொடியை நாங்கள் காட்டும் அளவிற்கு தரம் தாழ்ந்து போகவில்லை - செல்லூர் ராஜூ
அதிமுகவின் தொண்டர்கள் எவனாவது அடுத்த கட்சியின் கொடியை தூக்கியதாக வரலாறு உள்ளதா? - செல்லூர் ராஜூ

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
Source : whatsapp
தவெக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை விரும்புகிறார்கள். அதனால் தன் எழுச்சியாக எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் தவெக கொடியை காட்டுகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விளாங்குடி பகுதியில் புதிதாக கட்டமைக்கப்பட்ட நியாய விலை கடை மற்றும் அங்கன்வாடி மையத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
எடப்பாடி பழனிசாமி பிரச்சாரக் கூட்டத்தில் தவெக கொடியை காட்டுகிறார்கள். விஜய்க்காக குரல் கொடுத்தது எடப்பாடி பழனிசாமி. “யாருமே எந்த அரசியல் தலைவர்களும் எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை. எங்களுக்காக குரல் கொடுத்து எங்கள் சூழ்நிலையை எடுத்துச் சொன்னவர் எடப்பாடி பழனிசாமி. எனவே அவர் வந்ததால் நாங்கலாம் வந்து கொடியை காட்டினோம்” என்று தவெக தொண்டர்கள் கூறுகிறார்கள்.
தவெக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை விரும்புகிறார்கள். தன்னெழுச்சியாக கட்சி கொடியை காட்டுகிறார்கள். தனக்கு ஒரு பழம் கிடைக்கவில்லை என்றால், அந்த பழம் புளிக்கும் என சொல்வார்கள்.அதுபோல தான் விஜயின் ஆதரவு கிடைக்காததால், டி.டி.வி அதிமுக குறித்து விமர்சிக்கிறார். தரம் தாழ்ந்து போகக்கூடிய கட்சி எங்கள் கட்சி கிடையாது.
கொடியை தூக்கியதாக வரலாறு உள்ளதா?
அதிமுகவின் தொண்டர்கள் எவனாவது அடுத்த கட்சியின் கொடியை தூக்கியதாக வரலாறு உள்ளதா? கூட்டணி சேர்ந்தால் தோள் கொடுப்போம், தோளில் தூக்கி கொண்டாடுவோம். எங்களை எதிர்த்தால் தூக்கி போட்டு மிதித்து விடுவோம். இது அதிமுக தொண்டனின் வரலாறு. எங்கள் தலைவர்கள் சாமி என்றால் சாமி, சாணி என்றால் சாணி. எங்கள் தலைவர்கள் பொதுச் செயலாளர் யாரை சாமி என்று சொன்னால் அவரை நாங்கள் கும்பிடுவோம். அதிமுக காரன் அதுபோன்ற இழி பிறவி இல்லை.
திமுக எப்படியோ அப்படித்தான் விசிக
அதிமுக பன்மடங்கு நன்றாக இருக்கிறது. ஒரு தொதியில் இலட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். விசிக வன்முறை இயக்கத்தோடு சேர்ந்து விட்டது. அவரது கட்சி தொண்டர்கள் அந்த வேகத்தை காட்டியிருப்பார்கள். ஆனாலும் ஒரு கட்டுக்கோப்பு வேண்டும். விஜய் கட்சியை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்று சொல்கிறார். தன்னுடைய கட்சி தொண்டர்களின் நிர்வாகிகளையும் திருமாவளவன் கண்டிக்க வேண்டும். சேர்ந்த இடம் அப்படி திமுக எப்படியோ அப்படித்தான் விசிக - வும் இருப்பார்கள். தலைவர் எம்ஜிஆர் என்றால் ஒரு கெத்து தலைவருக்கு இணை யாரும் கிடையாது. சீனாவிலும் அரசியலிலும் கொடி நாட்டியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை-ரோடு எவனையும் ஒப்பிட மாட்டோம் எந்த தலைவரையும் ஒப்பிடமாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















