மேலும் அறிய
திமுக பீர் பாட்டில் வைத்து அழைப்பார்கள், ஆனால் நாங்கள்... - செல்லூர் ராஜூ சொன்னது என்ன?
கிடாவெட்டி, கறி போட்டு பிரியாணி போட்டு நடத்துற கூட்டம் அல்ல இந்த அதிமுக கூட்டம் - செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ
Source : whats app
மற்ற விசயங்களை பற்றி நான் பேசினால், நீங்க என்ன போடுவிங்க, எப்படி போடுவிங்கன எனக்கு தெரியும் - நைசாக பேசி நழுவிய செல்லூர் ராஜூ
அ.தி.மு.க இரத்ததான முகாம் நடைபெற்றது
முன்னாள் முதலமைச்சர், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 71 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக மாநில தகவல் தொழில் நுட்ப அணி மற்றும் மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
ஆளுங்கட்சியே மிரண்டு போய் உள்ளது - செல்லூர் ராஜூ
தொடர்ந்து நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜு பேசுகையில்..,” கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் பிறந்தநாள் விழாவை ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. கழகத்தில் பல்வேறு அணிகள் இருந்தாலும் இன்றைக்கு கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் நேரடி பார்வைக்கு கழக தொழில் நுட்ப பிரிவு உள்ளது. இன்றைக்கு ஏழை,எளிய மக்கள் பயன்
பெறுவகையில் உயிர்காக்கும் வகையில் ரத்ததான முகாம் நடைபெறுகிறது. இந்த ரத்ததான முகாமில் இளைஞர்கள் ஆர்வமுடன் ரத்ததானத்தை செய்து வருகிறார்கள், இதை பார்த்து ஆளுங்கட்சியே மிரண்டு போய் உள்ளது அந்த அளவில் இரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது.
பீர் பாட்டில் வைத்து அழைப்பார்கள்
இந்த ரத்த தானம் மூலம் பெறப்படும் ரத்தங்கள் தனியார் மருத்துவமனைக்கு கிடையாது, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இதன் மூலம் ஏழை மக்கள் பயன் பெறுவார்கள், ஒரு யூனிட் ரத்தம் மூலம் நான்கு உயிர்கள் காப்பாற்றப்படும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். திமுக கட்சி கூட்டத்தில் பீர் பாட்டில் வைத்து அழைப்பார்கள். ஆனால் நாங்கள் மக்கள் பயன்பெறும் வகையில் ரத்த தானம் என்று அழைக்கிறோம். இன்றைக்கு இளைஞர்கள் அதிகமாக வருகிறார்கள். இன்றைக்கு எடப்பாடியாருக்கு மக்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். 2026 ஆண்டில் அவர்தான் முதலமைச்சர், தற்போது 10 ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு எனது மேற்கு தொகுதிகள் பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது என கூறினார்.
நீங்க என்ன போடுவிங்க, எப்படி போடுவிங்கன எனக்கு தெரியும்
தொடர்ந்து அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ., வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுகிறது என்று குறித்த கேள்விக்கு, மற்ற விசயங்களை பற்றி நான் பேசினால், நீங்க என்ன போடுவிங்க, எப்படி போடுவிங்கன எனக்கு தெரியும் என்று பேட்டியை முடித்துக் கொண்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
தமிழ்நாடு
கிரிக்கெட்





















