மதுரையில் கொளுத்தும் வெயில்; அதிகரித்த ஆவின் மோர், தயிர் விற்பனை
மோர் இயல்பான நாட்களில் நாள்தோறும் 200 லிட்டர் விற்பனையான நிலையில் தற்போது நாள்தோறும் 800 லிட்டர் அதிகரித்து விற்பனையாகி வருவதாக ஆவின் பொதுமேலாளர் தகவல்.
மதுரையில் எங்கு திரும்பினாலும் கடும் வெயில் - பொதுமக்கள் அவஸ்தை
இந்திய அளவில் மதுரையில் வெப்பம் அதிகளவு வீசுவதாக தகவல்கள் வெளியானது. இந்த செய்தி மதுரை மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது. மதுரை விமான நிலையம், கள்ளிக்குடி, திருமங்கலம், அலங்காநல்லூர், உசிலம்பட்டி, மேலூர், வாடிப்பட்டி என மாநகரை சுற்றியுள்ள பகுதியிலும், செல்லூர், காந்திமியூசியம், ஐயர்பங்களா, கண்ணனேந்தல், டி.ஆர்.ஓ., காலனி என மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலும் வெயிலின் கொடுமை அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட 106 டிகிரி வரை வெயில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவஸ்தைப் பட்டு வருகின்றனர். நிழல்களை தேடி பொதுமக்கள் அழைந்து வருவது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதுரையில் கொளுத்தும் வெயில் அதிகரித்த ஆவின் மோர் மற்றும் தயிர் விற்பனை படு ஜோராக விற்பனையாகி வருகிறது.
- UAN Recovery: ஊழியர்களே..! உங்க UAN நம்பர மறந்துட்டீங்களா? மீட்பது எப்படி? வழிமுறை இதோ.!
மதுரையில் கொளுத்தும் வெயில் அதிகரித்த ஆவின் மோர் மற்றும் தயிர் விற்பனை
நாள்தோறும் 800 லிட்டர் அதிகரித்து விற்பனையாகி வருவதாக ஆவின் பொதுமேலாளர் தகவல்
இயல்பான நாட்களில் 2ஆயிரம் லிட்டர் தயிர் விற்பனையாக கூடிய நிலையில் கடந்த 5 நாட்களாக நாளொன்றுக்கு 2700 லிட்டர் வரை தயிர் விற்பனையாகிறது எனவும், மோர் இயல்பான நாட்களிங் நாள்தோறும் 200 லிட்டர் விற்பனையான நிலையில் தற்போது நாள்தோறும் 800 லிட்டர் அதிகரித்து விற்பனையாகி வருவதாக ஆவின் பொதுமேலாளர் தகவல். மதுரை கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் சூழலில், வெயில் மெதுவாக குறைந்து மழைக்கான வாய்ப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் இயற்கை இடர்பாடுகள் தவிர்க்கும் நோக்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டம்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை கூட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பேரிடர் மேலாண்மை சார்பில் வடகிழக்கு பருவமழை காலத்தில் இயற்கை இடர்பாடுகள் தவிர்க்கும் நோக்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா. சௌ.சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - SIIMA Winner List : ஐந்து விருதுகளை தட்டித்தூக்கிய ஜெயிலர்...சைமா விருது வென்றோர் முழுப் பட்டியல் இதோ
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - கதிகலங்க வைக்கும் ஒற்றை ஓநாய்.. அச்சத்தில் கிராம மக்கள்.. திணறும் வனத்துறை அதிகாரிகள்!