உசிலம்பட்டியில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் வழங்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

ரேஷன் பொருட்கள்

தமிழ்நாடு அரசின் திட்டங்களைப் பெறவும், பொதுவிநியோகக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மலிவு விலை அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களைப் பெறவும் ரேஷன் அட்டை முக்கியமானதாகும். இது பல்வேறு இடங்களில் ஆவணமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரசின் சார்பாக வழங்கப்படும் அட்டையாகும். குடிமக்களுக்கான இந்த ரேஷன் அட்டையானது முன்பு பேப்பரில் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஸ்மார்ட் கார்ட் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.


ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய், கடலை எண்ணெய் வழங்கக் கோரி உசிலம்பட்டியில் சாலை மறியல்

ரேஷன் அரிசி கடத்தல்

இந்த குடும்ப அட்டையில் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர்கள், முகவரி உள்ளிட்ட பல தகவல்களைக் கொண்டிருக்கும். இந்நிலையில் இந்த ரேஷன் அட்டை அடிப்படையில் வழங்கப்படும் ரேஷன் அரிசி வெளியூர்களுக்கு கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய், கடலை எண்ணெய் வழங்கக் கோரி உசிலம்பட்டியில் சாலை மறியல்

பாமாயிலுக்கு பதிலாக தேங்காய், கடலை  எண்ணெய்கள் Etc.,

தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக, விவசாயிகளிடமிருந்து தேங்காய் மற்றும் கடலை, எள் உள்ளிட்ட விளை பொருட்களை  கொள்முதல் செய்து தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய் உள்ளிட்டவைகள் விநியோகம் செய்யக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 18 மாவட்டங்களில் இன்று விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில இணைச் செயலாளர் நேதாஜி தலைமையிலான விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய், கடலை எண்ணெய் வழங்கக் கோரி உசிலம்பட்டியில் சாலை மறியல்
 
பாமாயில் கேடு
 
மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் பாமாயிலை தவிர்த்து இயற்கையான எண்ணெய்களை நியாய விலை கடைகளில் வழங்க வேண்டும் என கோசங்கள் எழுப்பி சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை உசிலம்பட்டி டி.எஸ்.பி. நல்லு தலைமையிலான போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.