மேலும் அறிய
Advertisement
அயன் பட பாணியில் துபாயிலிருந்து 1 கிலோ தங்கம் மலக்குடலில் கடத்தி வந்த நபர் கைது
நூதமுறையில் தங்கம் கடத்திய நபரிடம் பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அயன் பட பாணியில் துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு 80,77,160 ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 355 கிராம் தங்கத்தை மலக்குடலில் கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார்.
வயிற்றில் இருந்த 3 உருண்டைகளை இனிமா கொடுத்து வெளியே எடுத்தனர். அந்த உருண்டைகளை சோதனை செய்தததில் பேஸ்ட் வடிவிலான தங்கம் இருப்பது தெரியவந்தது .
துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மதுரை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று துபாயில் இருந்து காலை 10:30 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்த ஸ்பைஸ்ஜெட் விமான பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் சந்தேகப்படும்படி இருந்த நபரை அழைத்துச் சென்று சோதனை செய்ததில் வயிற்றுக்குள் சிறிய அளவில் உருண்டை வடிவில் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து வயிற்றில் இருந்த 3 உருண்டைகளை இனிமா கொடுத்து வெளியே எடுத்தனர். அந்த உருண்டைகளை சோதனை செய்தததில் பேஸ்ட் வடிவிலான தங்கம் இருப்பது தெரியவந்தது. அந்த கடத்தல் தங்கத்தின் மதிப்பு 80 லட்சத்து 77 ஆயிரத்து 160 ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ 355 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது எனவே இதனை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - "கழகங்கள் இனி கதறும் உன்னைப் பற்றி, திலகங்கள் உனக்கு இட இனிமேல் வெற்றி" - மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Advani: இந்துத்துவா கொள்கையை மூளை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தவர்.. எல். கே. அத்வானி கடந்து வந்த பாதை!
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion