மேலும் அறிய
Advertisement
மின்வாரியத்தில் காலியாக உள்ள 56 ஆயிரம் பணிகள் - உடனே நிரப்பிட கோரி தீர்மானம்
சொந்த மாவட்டங்களுக்கு செல்ல விருப்ப விண்ணப்பம் அளித்தவர்களுக்கு மாறுதல் உத்தரவு வழங்கிட, வலியுறுத்ததல் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது .
மின்வாரியத்தில் காலியாக உள்ள 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனே நிரப்பிட கோரி மதுரையில் நடந்த தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயீஸ் பெடரேசன் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காலிப் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும்
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் அருகே தனியார் திருமண மண்டபத்தில் வைத்து தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயீஸ் பெடரேசன் மாநிலத் தலைவர் மணிகண்டன் தலைமையில் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் குழு கூட்டத்தில் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயீஸ் பெடரேசன் மாநில உபத்தலைவர் முத்தையா, திண்டுக்கல் வட்ட செயலாளர் சுப்பிரமணியன், மதுரை திட்ட தலைவர் பாண்டி பெருநகர் வட்ட ஆண்டின் குயின் பாஸ்கர் உள்ளிட்ட சங்கத்தை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் மின்வாரியத்தில் காலியாக உள்ள 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும், மின்வாரிய ஊழியர்களுக்கு உபகரணங்கள் வழங்காததால் தான் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது.
15 தீர்மானங்கள் இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது
ஒரே ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 70-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்களுக்கு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. எனவே உடனே மின் உபகரணங்களை வழங்கிட வேண்டும் 2023- முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வை உடனே வழங்கிட வேண்டும், இரண்டு ஆண்டுக்கும் மேலாக கணக்கு மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்காமல் மின்வாரியம் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும், தற்சமயம் பணிபுரிந்து வரும் கேங்மேன் பணியாளர்கள் விருப்பமார்களின் தங்களது சொந்த மாவட்டங்களுக்கு செல்ல விருப்ப விண்ணப்பம் அளித்தவளுக்கு மாறுதல் உத்தரவு வழங்கிட வலியுறுத்ததல் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
கோரிக்கை நிறைவேற்ற வேண்டும்
மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “தமிழ்நாடு மின்வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடஙகள் இருக்கிறது. அதனை உடனடியாக நிரப்ப வேண்டும். அதனால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். மின்வாரியத்தின் சிக்கல்கள் தவிர்க்கப்படும். ஏற்கனவே பணி செய்யும் நபர்களின் மன அழுத்தம் குறையும். அதே போல் கடினாமாக உழைக்கும் மின்வாரிய ஊழியர்களுக்கு, அவர்களின் உயிரை பாதுகாக்கும் வண்ணம் போதிய உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட எங்களின் அத்துனை கோரிக்கையையும் அரசு செய்து கொடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தவெக... தமிழகத்திலேயே முதல்முறையாக 50 அடி உயர கொடி ஏற்றி வைத்து 1000 பேருக்கு சமபந்தி அசைவ விருந்து
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - VCK Ravikumar : ”பாஜகவின் திட்டத்தை செயல்படுத்தும் முருகன் மாநாடு” விசிக எம்.பி. ரவிக்குமார் கடும் எதிர்ப்பு – கூட்டணியில் சலசலப்பு..?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
க்ரைம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion