மதுரையில் நாளை (29.05.2025) மின்தடை ஏற்படும் இடங்கள் இது தான்
Madurai Power Shutdown (29.05.2025): மதுரையில் பல்வேறு இடங்களில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Power Shutdown: மதுரையில் மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு.
மின் தடை
மதுரையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (29.05.2025) காலை 9.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் மூலம் தகவல் வெளிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும்போது அதுபற்றி முந்தைய நாளன்று மின் வாரியம் மூலம் தகவல் அறிவிக்கப்படும்.
செயற்பொறியாளர் தகவல்
பராமரிப்பு பணிக்காக சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம், இந்நிலையில் இது குறித்து மதுரை கிழக்கு செயற்பொறியாளர் இரா.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் நாளை மின் தடை செய்யப்பட்ட உள்ள பகுதிகள்.
கொட்டாம்பட்டி - கருங்காலகுடி
பொட்டப்பனையூர், ஆர்.எம்.காலனி, விளத்தூர், இளமனூர், கோழக்குடி, சக்கிமங்கலம், சௌராஷ்டிரா காலனி, எல்.கே.பி புரம், புவனேஷ்வரி நகர், அம்பேதகர் நகர், அஞ்சுகம் நகர், ஆண்டார்கொட்டாரம், கருப்பு பிள்ளையனேந்தல், கல்மேடு, அய்யனார் நகர், அய்யணன் நகர், சந்திரலேகா நகர், களஞ்சியம், சமத்துவபுரம், முனியாண்டி புரம்.





















