மேலும் அறிய
Madurai Power Shutdown - நாளை ஜூலை 18: மதுரையில் மின்தடை; உங்கள் பகுதி உள்ளதா?
மதுரையில் பல்வேறு இடங்களில் நாளை (18.07.2026) மின்தடை ஏற்படவுள்ளது, இது குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது.

மின்தடை
Source : whatsapp
பின் வரும் வழிமுறைகளை பின் பற்றும் போது, குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.
மின்தடை
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( ஜூலை 18, 2025) அன்று மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது. மாதாந்திர பராமரிப்புப் பணிகள் தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை மின் தடை ஏற்படவுள்ளது.
நாளை (ஜூலை 18) மின்தடை (காலை 9:00 - மாலை 4:00 மணி)
மதுரை சித்திரை வீதி கள், கீழ, மேல பட்டமார் தெருக்கள், ஆவணி மூலவீதிகள், வெள்ளியம்பலம் தெரு, மேல, கீழச்செட்டி தெருக்கள், மறவர் சாவடி, ஜடா முனி கோயில் தெரு, அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, கீழ, மேலநாப் பாளையம், கீழமாசிவீதி, தாசில்தார் பள்ளிவாசல் தெரு, தளவாய் தெரு, தொட்டியன் கிணற்று சந்து, கீழமாரட் வீதி, மீனாட்சி கோயில் தெரு, அனுமார் கோயில் படித்துறை, வக்கீல் புதுத் தெரு, கிழக்கு, வடக்கு மாசிவீதி, செல் லத்தம்மன் கோயில் தெரு, காமாட்சி அம்மன் கோயில் தெரு, நெல் பேட்டை, காயிதே மில்லத் தெரு, சோமசுந்தர அக்ரஹாரம், நேதாஜி மெயின் ரோடு, திருமலைராயர் படித் துறை, தைக்கால் தெரு, வடக்குவெளி வீதி, தெற்கு காவல்கூடத் தெரு, மேல கோபுரம் வீதி.
மதுரை சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜாமில் ரோடு, கனகவேல் காலனி, மணிநகரம், ஒர்க் ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கட சாமி நாயுடு அக்ரஹாரம், தமிழ்ச்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்கு ளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம், திலகர் திடல் சந்தை, பாரதியார் ரோடு, அங்கயற்கண்ணி வளாகம், அழகரடி, விவேகானந்தா ரோடு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் மெயின் ரோடு, புட்டுத் தோப்பு மெயின் ரோடு, எச்.எம்.எஸ்., காலனி, மேலப்பொன்னகரம் மெயின் ரோடு, புதுஜெயில் ரோடு, கரிமேடு, மோதிலால் மெயின் ரோடு, ராஜேந்திரா மெயின் ரோடு, பாரதியார் ரோடு, பொன்னகரம் பிராட்வே, தாகூர் நகர், பாலம் ஸ்டேஷன் ரோடு, குலமங்க லம் மெயின் ரோடு, அய்யனார் கோயில்தெரு, செல்லுார் 60 அடி ரோடு.
(காலை 9:00 - மாலை 5:00 மணி)
மேலுார்,மில்கேட், வெங்கடேஷ் நகர், சந்தைப்பேட்டை, சிவகங்கை 'ரோடு, கஸ்துாரிபாய் நகர், நொண்டி கோவில்பட்டி, காந்தி நகர், ஆட்டுக்கு ளம், உலகநாதபுரம், பெருமாள்பட்டி, கொட்டகுடி, சத்தியபுரம், மேலப் பட்டி, ஆண்டிபட்டி, சின்ன சூரக் குண்டு, நாகலிங்கபுரம், விநாயகபுரம், வண்ணாம்பாறைப்பட்டி, நாவினிப் பட்டி, பதினெட்டாங்குடி.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
Before You Go
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















